Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரை நட்சத்திர கலை விழா: பங்கேற்க விரும்பிய முதல்வர்

21 செப், 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
CM-wishes-to-Chinnathirai-function

மலேசியாவில் வருகிற 28ந் தேதியில் சின்னத்திரை நட்சத்திரக் கலைஞர்களின் கலை விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சின்னத்திரை நடிகர் சங்கக்தலைவர் ரவிவர்மா தலைமையிலான குழுவினர் செய்து வருகிறார்கள். விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:

சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா மலேசியாவில் 28.09.2019 அன்று நடைபெறுவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவில் நான் பங்கேற்க விரும்பிய போதிலும், முக்கிய அலுவல் காரணமாக என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த இனிய விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக என் இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைவிழா சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் சங்க உறுப்பினர்களின் குடும்ப நலனுக்காகவும் நடைபெறுவது மிகவும் பாராட்டுக்குரியது. சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கல்லாப்பெட்டி உடன் வருகிறார் இமான் அண்ணாச்சிகல்லாப்பெட்டி உடன் வருகிறார் இமான் ... மலையாளத்தில் வரவேற்பு பெறாத பிக் பாஸ் மலையாளத்தில் வரவேற்பு பெறாத பிக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Dravid Tam - MAdras ,இந்தியா
26 செப், 2019 - 10:08 Report Abuse
Dravid Tam இது ஒரு நியூஸ் னு போடுற . எடுபுடிக்கு நிறைய வேல இருக்கு அதனால எப்புடி௯ சொல்றன் அதை நீ மொக்கையா ஒரு நியூஸ் பெடோரா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in