Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

காதலித்து - முறையாக நடந்த திருமணம்: அனிதா

31 ஆக, 2019 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Anitha-about-her-wedding

திருமணம் முடிந்த கையோடு செய்தி வாசிப்பாளர் அனிதா, திருமணம் குறித்து பதிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் அனிதா. சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றிலும் நடித்திருப்பவர். தொடர்ந்து, சூர்யா நடிக்கும் காப்பான் படத்தில் நடித்துள்ளார்.

அனிதாவுக்கு, சமீபத்தில் திருமணம் நடந்தது. ஆனால், திருமணம் குறித்து, பெரிதாக யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. இருந்த போதும், திருமண புகைப்படம், சமூக வலைத்தள பக்கங்களில் வெளியானது. வெளியே தெரியாமல் திருமணம் செய்து கொண்டது ஏன் என, அனிதாவை பலரும் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

இதைத் தொடர்ந்து, அவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய விளக்கத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: முதலில், எல்லோரிடமும் பெரிய பெரிய பெரிய மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இன்ஸ்டா நண்பர்களுக்கு...

கடந்த 25ல் திருமணம் முடிந்தது. ஆனால், இது குறித்தத் தகவலை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 22லியே பதிவிட்டிருக்கிறேன். 26ம் தேதி வரை, என் இன்ஸ்டாகிராம் பக்கம் பிளாக் செய்யப்பட்டிருந்தது. அதனால், எதையும் பதிவிட முடியவில்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, எனக்கு, சம்பத்தோடு நடந்த திருமணத்தை, பலரும் திடீர் திருமணம் என கூறி வருகின்றனர். அதெல்லாம் ஒன்றும் இல்லை. மூன்று வருடங்களாக காதித்தோம். பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த முறையான திருமணம்.

கல்யாணம் எனச் சொல்லி, தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எளிமையாக இருக்க வேண்டும் எனபது விருப்பம். அதற்காகவே, திருமணத்துக்கு எல்லோரையும் அழைக்க முடியவில்லை. குடும்பத்தார், மிக நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து, திருமணத்தை நடத்தி விட்டோம். இருவரையும் வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அனிதா பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் ஒளிபரப்பாகிறது சாணக்கியர் வரலாறுதமிழில் ஒளிபரப்பாகிறது சாணக்கியர் ... பாலிமர் தொலைக்காட்சியின் புதிய தொடர் விதி பாலிமர் தொலைக்காட்சியின் புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03 செப், 2019 - 04:09 Report Abuse
skv srinivasankrishnaveni எல்லாருமே இப்படியேதான் திருமணம் செய்யவேண்டும் என்பது என்பொலாபலரின் விருப்பம் என்னாத்துக்கு அனாவசிய சிலவுகளும் டாம்பீகமும் வாழப்போறது மணமக்கள் மனம் ஒத்து மகிழ்ச்சியுடன் வாழனும் ரெண்டுபக்க பெற்றோரும் உறவுகளும் தேவை பிரெண்ட்ஸ்கூட பிறகுதான் , திருமண விருந்தும்கூட எளிமையா இருக்கவேண்டும் பல உணவுகளைபறிமாறி குப்பையேகொட்டாமல் உருப்படியா அனாதை இளம்களுக்கே தானமா தந்தா பல வறியவர்கள் வயறு நிரம்பும்
Rate this:
LAX - Trichy,இந்தியா
01 செப், 2019 - 03:06 Report Abuse
LAX "கல்யாணம் எனச் சொல்லி, தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. எளிமையாக இருக்க வேண்டும் எனபது விருப்பம்.." - Good.. GREAT.. Superb....
Rate this:
LAX - Trichy,இந்தியா
01 செப், 2019 - 03:05 Report Abuse
LAX சகோதரி அனிதாவுக்கு வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in