Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

குற்ற விவரம் அத்துபடி: கணேஷ் வெங்கட்ராமன்

29 ஆக, 2019 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Ganesh-Venkatram-to-compare-crime-story

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இறுதிப் போட்டி வரை வந்த போட்டியாளர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர், தற்போது, சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு புதிய வாய்ப்பு ஒன்று கதவைத் தட்டி இருக்கிறது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது. இந்தியில் புகழ்பெற்ற கிரைம் டி.வி. நிகழ்ச்சி ஒன்றின், தமிழாக்கம் விரைவில், தமிழ் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்புத்தான், நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்குக் கிடைத்திருக்கிறது.

இந்தியில், அனுப் சொனி என்பவர், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அவர் எப்படி நிகழ்ச்சியை விறுவிறுப்புடன் கொண்டு சென்றாரோ, அதே விறுப்புடன் தன்னாலும் கொண்டு செல்ல முடியும் என கூறியிருக்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்.

தனக்கான புதிய வாய்ப்பு குறித்து, கணேஷ் வெங்கட்ராமன் மேலும் கூறியதாவது: என்னுடைய தாத்தா காவல்துறை அதிகாரியாக இருந்தவர். தந்தை வழக்கறிஞர். இருவரும் சட்டம் - ஒழுங்கு சம்பந்தமாக நிறைய விஷயங்களை தினந்தோறும் அணுகுவர். அதை அருகில் இருந்து நானும் பார்த்திருக்கிறேன். அதனால், குற்றம், அது தொடர்பான விசாரணை குறித்தெல்லாம் எனக்கு நன்கு தெரியும். அதனால், க்ரைம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை என்னால் மிகச் சிறப்பாக செய்ய முடியும். நிகழ்ச்சிக்கான பதிவு செய்யும் பணிகள் வேகமாக துவங்கி விட்டன. விரைவில், நிகழ்ச்சி எப்போதிலிருந்து ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சின்னத்திரைக்கு திரும்பிய விசித்ராசின்னத்திரைக்கு திரும்பிய விசித்ரா கலர்ஸ் தமிழ் சீரியல்கள் வாரத்தில் 6 நாட்களாக நீட்டிப்பு கலர்ஸ் தமிழ் சீரியல்கள் வாரத்தில் 6 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in