வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
விஜய் டி.வியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். தொகுப்பாளினி வேலையை செய்து கொண்டே சினிமாவில் நடிக்க முயற்சித்தார். அதன் பலனாக ‛கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தார். அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டார்.
இந்த முறை தொகுப்பாளினியாக அல்ல... நடிகையாக. விஜய் டி.வியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்றத் தலைவி என்ற தொடரில் நடிக்கிறார். இது முழுக்க முழுக்க காமெடி தொடர். இதன் கதை சுருக்கம் வருமாறு:
அந்த கிராமத்திலேயே முதல் பட்டதாரி தேன்மொழி. அதனால் அவள் வீட்டுக்கு, ஊருக்கு செல்லம். அவளை அனைவரும் தேன்மொழி பி.ஏ என்று தான் அழைப்பார்கள். உள்ளாட்சி தேர்தல் வரும்போது அதில் போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவி ஆகிறாள் தேன்மொழி. ஏற்கெனவே ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் தேன்மொழிக்கு வில்லன் ஆகிறார். தேன்மொழியை தன் வீட்டு மருகளாக்கிக் கொண்டு பழிவாங்க நினைக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.