ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |
பிரபல கன்னட சின்னத்திரை சீரியல் நடிகை ஷோபா. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஷோபா, மகளு ஜானகி என்ற தொடர் மூலம் புகழ்பெற்றார். இப்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பெங்களூரில் வசித்து வந்த ஷோபா, கர்நாடக மாநிலத்தில் பிரபலமான பனசங்கரி கோவிலுக்கு குடும்பத்துடன் வேண்டுதல் நிறைவேற்ற காரில் சென்றார். கார் சித்ரகோட் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென கார் டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. தூக்கி வீசப்பட்ட காரில் இருந்த ஷோபா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
அவருடன் அந்த காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். ஷோபாவின் உறவினர்கள் அசோக், ஷியாமளா, சுகன்யா, மஞ்சுளா ஆகியோரும் அதே இடத்தில் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.