Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீண்டும் வருகிறார் வாணிஸ்ரீ

15 ஜூலை, 2019 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Actress-Vanisri-backs-to-acting

வசந்த மாளிகை படத்தின் மூலம் 80களில் வாழ்ந்த இளசுகளின் தூக்கத்தை கெடுத்தவர் வாணிஸ்ரீ. காதல் படுத்தும் பாடு படத்தில் அறிமுகமான இவர் நம்ம வீட்டு லட்சுமி, தாமரை நெஞ்சம், உயர்ந்த மனிதன், இருளும் ஒளியும், வெள்ளிவிழா, சிவகாமியின் செல்வன், நல்லதொரு குடும்பம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பரத்ரி ராமுடு என்ற தெலுங்கு படம் தான் அவர் கடைசியாக நடித்தது.

தற்போது அவர் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் பிரேம் நகர் என்ற தொடரில் நடிக்கிறார். இது வாணிஸ்ரீ நடிப்பில் 1971ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படத்தின் தலைப்பு. இந்த தொடரை நாகர்ஜுனாவின் அண்ணபூர்ணா ஸ்டூடியோ தயாரிக்கிறது. வாணிஸ்ரீயை, தமிழ் டி.வி.தொடரிலும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. தெலுங்கு தொடரில் நடிப்பது குறித்து வாணிஸ்ரீ கூறியதாவது:

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகினேன். குஷ்பு, சுஹாசினி உள்பட பலர் நான் மீண்டும் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். எனது மகளும் நடிக்கும்படி கூறினார். இதனால் நாகேஷ்வரராவின் நிறுவனம் தயாரிக்கும் தெலுங்கு டி.வி. தொடரில் பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகிவிட்டேன். அந்த கால நடிகைகளில் நான் மட்டும்தான் கருப்பாக இருந்தேன். ஆனாலும் நடிப்பையும், அழகையும் கடவுள் எனக்கு கொடுத்து இருந்தார். என்கிறார் வாணிஸ்ரீ.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
டி.வி நடிகையை டார்ச்சர் செய்த டிரைவர்டி.வி நடிகையை டார்ச்சர் செய்த ... சின்னத்திரை நடிகர்களின் மலேசிய கலை நிகழ்ச்சி தள்ளிவைப்பு சின்னத்திரை நடிகர்களின் மலேசிய கலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

rajkumar rana - chidambaram,இந்தியா
30 செப், 2019 - 15:32 Report Abuse
rajkumar rana வணக்கம் அம்மா. ரொம்ப சிறப்பான செய்தி .
Rate this:
rajkumar rana - chidambaram,இந்தியா
30 செப், 2019 - 15:26 Report Abuse
rajkumar rana நான் உங்களின் மிக பெரிய விசிறி. நீங்க கண்டிப்பா தமிழில் நடிக்க வேண்டும். மயக்கம் என்ன பாடல் என்றும் மறக்க இயலாது .வாழ்த்துக்கள் அம்மா .
Rate this:
LAX - Trichy,இந்தியா
22 ஜூலை, 2019 - 03:49 Report Abuse
LAX வெள்ளி விழா, வசந்த மாளிகை, நல்லதொரு குடும்பம், சிவகாமியின் செல்வன், வாணி ராணி உள்ளிட்ட வாணிஸ்ரீ நடித்த படங்கள் பலவும் EVER GREEN.. எப்போது போட்டாலும் அத்தனை முறையும் சலிக்காமல் பார்த்து ரசிக்கலாம்.. வாழ்த்துக்கள் வாணி ஜி..
Rate this:
LAX - Trichy,இந்தியா
22 ஜூலை, 2019 - 03:41 Report Abuse
LAX Welcome to Thamizh also Vani Ji..
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 17:43 Report Abuse
Vasudevan Srinivasan என்னது வாணிஸ்ரீ அவர்கள் நடிக்கும் தெலுங்கு சீரியல் பெயர் 'பிரேம் நகர்' ...? அது 'வசந்த மாளிகை' படத்தின் தெலுங்கு பெயராச்சே..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Naan Sirithal
  • நான் சிரித்தால்
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
  • இயக்குனர் :இராணா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Seeru
  • சீறு
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ரியா சுமன்
  • இயக்குனர் :ரத்ன சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in