சர்ச்சை கருத்து : கன்னட நடிகர் சேத்தன் கைது | ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் | குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி | நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! |
விஜய் டி.வியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. நடிகை கஸ்தூரியும் தன் பங்கிற்கு டுவிட்டரில் நிகழ்ச்சியை கலாய்த்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு...
இதே சேனல்ல "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க... அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் எங்க பிளாட்ஸ் ல எல்லா வீட்டுலயும் குழந்தைகளாம் பாக்குறாங்க.... குழந்தைங்க பாக்குற நிகழ்ச்சியா இது? என்று எழுதியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் பட்டியலில் முதலில் கஸ்தூரி கடைசி நேரத்தில் இடம்பெறவில்லை. அந்த கோபத்தில் நிகழ்ச்சியை கலாய்த்து வருவதாக நெட்டிசன்கள் கஸ்தூரியை விமர்சித்து வருகிறார்கள்.