விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது | வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் |
கலர்ஸ் தமிழ் சேனல், தனது பிறமொழி சேனலில் நல்ல வரவேற்பு பெற்ற தொடர்களை தமிழில் ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் வருகிறது சந்தியா என்கிற தொடர். இது ஒரு பேண்டசி த்ரில்லர் தொடர். வருகிற ஜூலை 1ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சந்தியா என்கிற பெண்ணை சுற்றி நடக்கிற கதை. சிவராத்திரி அன்று சக்தி வாய்ந்த சிவன் கோவிலில் சந்தியா வழிபாடு நடத்துகிறார். சிவனின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு அவர்களது எதிர்காலம் தெரியும் என்பது ஐதீகம். சந்தியாவுக்கு அந்த சிவனின் அருள் கிடைக்கிறது. அதில் அவள் வருங்கால கணவனை காண்கிறாள். இதனால் அவள் அதிர்ச்சி அடைகிறாள். காரணம் அவள் தற்போது வேறொருவனை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். இதற்கு காரணம் ஒரு தீய சக்தி. அது ஏன் சந்தியாவின் வாழ்க்கைக்குள் வரவேண்டும். வந்து என்ன செய்கிறது என்பதுதான் சந்தியாவின் கதை.