அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் நேற்றைய மூன்றாம் நாள் நிகழ்வு ஆரம்பத்தில் கொஞ்சம் சண்டையாகவும், பின்னர் அழுகையாகவும் முடிந்தது. தங்கள் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை மோகன் வைத்யா, ரேஷ்மா இருவரும் கூறி கண்ணீர் விட்டு அழுது, சக போட்டியாளர்களையும், நிகழ்ச்சியைப் பார்த்தவர்களையும் அழ வைத்தார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு சுவாரசியமாக நகர்த்த ஆரம்பித்துவிட்டார் பிக்பாஸ். இந்த சீசனின் இளம் பெண் போட்டியாளர்களாக லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி அகர்வால் இருக்க, அவர்களை விட கொஞ்சம் சீனியர்களாக வனிதா விஜயகுமார், ஷெரின் இருக்கிறார்கள். இவர்கள் ஐந்து பேரும் தான் இந்த சீசனின் துருப்புச் சீட்டுகள். இவர்களை முடிந்தவரைக்கும் எலிமினேஷனிலிருந்து பிக்பாஸ் காப்பாற்றுவார் என்றே தோன்றுகிறது.
அவர்களுடன் இளம் ஆண் போட்டியாளரான கவின் அதிகமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். அதிலும் அபிராமி வெட்கத்தை விட்டு கவினைக் காதலிப்பதாகக் கூற, அதை கவின் இயல்பாக நிராகரித்தார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பான முதல் புரோமோவில் லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி, வனிதா, ஷெரின் ஆகியோருடன் கவின் வாயைத் திறந்து பேசக் கூடாது என பிக்பாஸ் அவருக்கு டாஸ்க் கொடுத்துள்ளார். அந்த டாஸ்க்கை அவர் வெற்றிகரமாக செய்து முடிப்பாரா இல்லையா என்பது இன்றிரவு நிகழ்ச்சியில் தெரிய வரும்.