Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சாந்தினி, சாக்ஷி அகர்வால், மகேந்திரன் : பிக்பாஸில் இணைகிறார்கள்

12 மே, 2019 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Chandini,-Sakshi,-Mahendran-to-joint-in-Biggboss-3

விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாசின் 3வது சீசன் அடுத்த மாதத்தில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இதனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நல்ல விளம்பரமும், நிகழ்ச்சிக்கு பிறகு வாய்ப்பும் கிடைப்பதால் தற்போது மார்கெட் இல்லாமல் ஒதுங்கி இருக்கும் நடிகர், நடிகைகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், சேனல் சில விதிமுறைகள் வகுத்து அற்கேற்ப போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறது.

இதுவரை நடந்த தேர்வுகளில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன், நடிகைகள் சாந்தினி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் தேர்வாகி இருப்பதாக சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். தாய்குலமே தாய்குலமே, கும்பகோணம் கோபாலு படத்தில் நடித்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருது பெற்றவர். ஆளுக்கொரு ஆசை, விழா, நெஞ்சிருக்கும்வரை உள்பட பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது விந்தை, நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு உள்பட 5க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

சாந்தினி எத்திராஜ் கல்லூரியிஸ் விஸ்காம் படித்தவர். பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 படத்தில் சாந்தணு ஜோடியாக சினிமாவில் அறிமுகமாகி நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, நையப்புடை, என்னோடு விளையாடு, கவன், மன்னர் வகையறா உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் 10 படங்கள் வரை கையில் இருக்கிறது. சிறு முதலீட்டு படங்களின் ஆஸ்தான நாயகி சாந்தினி. சமீபத்தில்தான் நடன இயக்குனர் நந்தாவை திருமணம் செய்தார்.

உத்ரகாண்டைச் சேர்ந்தவர் சாக்ஷி அகர்வால். அண்ணா பல்கலைகழகத்தில் எம்பிஏ படிக்க வந்தவர் அப்படியே நடிகை ஆகிவிட்டார். ஒரு சில சிறு பட்ஜெட் படங்களில் நடித்தவர், காலா, விஸ்வாசம் படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகையை திருமணம் செய்து வையுங்கள்: வாலிபர் கலாட்டாநடிகையை திருமணம் செய்து வையுங்கள்: ... அமித், ஸ்ரீரஞ்சனிக்கு பெண் குழந்தை அமித், ஸ்ரீரஞ்சனிக்கு பெண் குழந்தை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in