Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சூப்பர் சிங்கர் 6 : ரித்திக் வின்னர், அனுஷ்யா 3ம் இடம் கூட இல்லை

22 ஏப், 2019 - 17:39 IST
எழுத்தின் அளவு:
Super-Singer-6-:-Rithik-won-the-title

விஜய் டிவியில் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக நடக்கும் இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த சில மாதங்களாக ஒளிப்பரப்பாகி வந்தன. இறுதிப்போட்டிக்கு ரித்திக், அனுஷ்யா, சின்மயி, பூவையார், அஹானா மற்றும் சூர்யா ஆகிய 5 பேர் தேர்வாகினர்.

பிரபல பின்னணி பாடகர்களான ஷங்கர் மஹாதேவன், சித்ரா, எஸ்.பி.பி.சரண், கல்பனா ஆகிய 4 பேரும் நடுவர்களாக இருந்து இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினர். இறுதிப்போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் 6 பேரும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இறுதியில் ரித்திக் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் சூர்யாவுக்கும், மூன்றாம் இடம் பூவையாரும் பெற்றனர். இவர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சிறப்பாக பாடி வந்த அனுஷ்யா மூன்றாவது இடத்திற்கு கூட தேர்வாகவில்லை. உண்மையில் இவர் அல்லது ரித்திக் தான் டைட்டில் வின்னர் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுஷ்யா தேர்வாகாதது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Advertisement
கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய
சூப்பர் சிங்கர் சீசன் 6 இறுதிபோட்டிசூப்பர் சிங்கர் சீசன் 6 இறுதிபோட்டி சின்னத்திரையிலிருந்து வரும் அடுத்த காமெடியன் சின்னத்திரையிலிருந்து வரும் அடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (33)

rajkumar rana - chidambaram,இந்தியா
29 மே, 2019 - 03:56 Report Abuse
rajkumar rana சூப்பர் சிங்கர் பகுதி ஆறு மற்ற பகுதியை விட மிகவும் அழகானது .ரித்திக்கு முதல் பரிசு கொடுத்தது சரியானது. நீங்க முழுசா சூப்பர் சிங்கர் பார்த்து இருந்திங்கனா தெரியும். அனுசுயா நல்ல பாடகி. தவறு ரித்திக் மேல இல்ல. அவனும் சீசன் முழுக்க நல்லா பாடினான்.விஜய் டிவி நிர்வாகம் மேல இருக்கு தவறு .பூவையர்கு மக்கள் கொடுத்த பரிசு .மேலும் சூர்யா கூட இரண்டாம் இடம் தகுதியானதே. போட்டியாளர்கள் யாரையும் குறை சொல்ல முடியாது . நான் சூர்யாக்கு தான் வாக்கு அளித்தேன். நன்றி .
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 மே, 2019 - 19:57 Report Abuse
Vasudevan Srinivasan இதேபோலத்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி கடுமையான உழைப்பாளியான ரமணியம்மாள் அவர்கள் அளவுக்கு அதிகமாக உயர்த்தி அவரை நம்பர் ஒன் ஆக்கியது.. அதுவும் ஒரு திறமையின் அடிப்படை மட்டுமன்றி கருணையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாகவே தெரிந்தது அவர் மீது கருணை கொண்டு ஏதாவது வெகுமதி கொடுத்து பாராட்டியிருக்கலாம் ஆனால் அவர் சிறந்த பாடகி என்று சொல்லி பரிசு வழங்கியது பொருத்தமாக இல்லை
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
28 ஏப், 2019 - 17:57 Report Abuse
Endrum Indian இந்த கருத்து எதிர்மறை என்று நினைக்காதீர்கள். குழந்தைகள் செய்ய வேண்டியது என்ன படிப்பு அதைத்தவிர வேறு கவனம் கூடாது. இந்த மாதிரி போட்டிகள் குறைந்தது 16 வயதை தாண்டியவர்களுக்கு மட்டுமே என்று இருக்க வேண்டும். பிஞ்சு குழந்தைகளின் வாழ்வு மேல்வருவது எத்தனை பேர் இருவர், மூவர் மட்டுமே. மற்ற தோற்ற குழந்தைகளின் வாழ்வு, அவர்களை வழி நடத்தியது யார் தாய் தந்தை என்ன எண்ணம் பணம் நிறைய கிடைக்கும் என்று. இந்த வயதிலேயே இவ்வளவு நாசமான எண்ணத்தை ஒன்று அல்ல ஆயிரம் அல்ல பல்லாயிரம் குழந்தைகள் இதில் கலந்து கொள்ளுதல் அதில் சிலவற்றாற் மட்டும் தேர்வு அதில் 3 பேர் முன்னிலை. நாசமானது அந்த பல்லாயிரம் குழந்தைகள் வாழ்வு. இந்த மாதிரி சுத்த முட்டாத்தனமான ப்ரோக்ராம்களை உடனே தடை செய்ய வேண்டும். இன்னொரு இடத்தில் நடன போட்டி. ஆக மொத்தம் பண ஆசை கொண்ட தாய் தந்தையர்கள் இவர்களின் குழந்தை பிராயத்தை நாசமாக்கி இவர்கள் நம் வருங்கால தூண்கள்??? நாராயணா??? யோசனை செய் மானிடர்களே.
Rate this:
Soosaa - CHENNAI,இந்தியா
28 ஏப், 2019 - 14:20 Report Abuse
Soosaa Yaro nalu per cinema vula pada aga ore madhiri bore program ovvovoru Time mum makkalum polambittu anaa thirumba thirumba parthu trp rate aetri vittu ....people are really fools
Rate this:
suresh - colombo,இலங்கை
28 ஏப், 2019 - 11:09 Report Abuse
suresh she is not sui for this junior season. Because she had more experience from last two seasons. she have to participate super singer 7. All the winners looking below 12 years old.
Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in