Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ராதிகாவுக்கு பதில் விஜி சந்திரசேகர்

10 ஏப், 2019 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Radhika-Uut-Viji-In-in-Chandrakumari-serial

நடிகை ராதிகா தனது ராடான் டி.வி மூலம் சின்னத்திரை தொடர்களை தயாரித்து, ஒளிபரப்பி வருகிறார். அவரது வாணி ராணி தொடர் 5 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்தது. அதன்பிறகு அவர் சந்திரகுமாரி என்ற பிரமாண்ட சரித்திர தொடரை ஆரம்பித்தார். சரித்திரகாலம், நிகழ்காலம் என இரண்டு கதைகளை கொண்டது இந்த தொடர். இதில் ராதிகா 7 வேடங்களில் நடித்து வந்தார்.

சின்னத்திரை தொடர்களில் இது தான் பிரமாண்டமாக வரும், மக்கள் வரவேற்பை பெறும் என்ற நம்பினார் ராதிகா. ஆனால், எதிர்பார்த்தது நடக்கவில்லை. சீரியலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இரவு 9.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த தொடரை மாலை 6.30 மணிக்கு மாற்றியது சேனல்.

இந்த நிலையில் சின்னத்திரை நடிப்பில் இருந்து சில காலம் விலகி ஓய்வு எடுக்கப் போவதாக ராதிகா அறிவித்தார். அப்படியானால் இனி சந்திரகுமாரி தொடர் நிறுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் நடித்து வந்த சந்திரகுமாரி கேரக்டரில் இனி, விஜி சந்திரசேகர் நடிப்பார் என்று ராதிகா அறிவித்துள்ளார்.

விஜி சந்திரசேகர், நடிகை சரிதாவின் தங்கை. தற்பொது சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். ராதிகா மாதிரி திறமையான ஆளுமையால் மட்டுமே 7 வேடங்களில் நடிக்க முடியும். விஜி சந்திரசேகரால் முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் சீரியலில் சில மாற்றம் செய்து எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நீலிமா தயாரிக்கும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்நீலிமா தயாரிக்கும் கண்டுகொண்டேன் ... ஆல்யா மானசா, சஞ்சீவ் திருமண நிச்சயதார்த்தம் ஆல்யா மானசா, சஞ்சீவ் திருமண ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

rajkumar rana - chidambaram,இந்தியா
29 மே, 2019 - 04:04 Report Abuse
rajkumar rana பாகுபாலி கு நிகர் என்கிறது ஒன்னும் இல்லை. முன்னாடி இருந்த ராதிகா சீரியல்களில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லை. மேலும் மற்ற சேனல்களும் நல்ல சீரியல் கொடுக்கிறது .கலர் தமிழ் ஜீ தமிழ் எல்லாம் சூப்பர் மாஸ் சீரியல் கதை இருக்கிறது ஆதலால் இது எடுபட வில்லை .
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12 ஏப், 2019 - 04:01 Report Abuse
meenakshisundaram கிழட்டு ராணி வேடமா ?அப்போ ராதிகா தான் சரி,போன தலைமுறை நடிகை .
Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
10 ஏப், 2019 - 14:31 Report Abuse
Babu Desikan பாஹு பலி (புலி) யை பார்த்து சூடு (பூனை) போட்டுக் கொண்டிருக்கிறார். பல வட இந்திய சீரியல்களும் புராண பிரம்மாண்டத்தை காண்பிக்கின்றன. கதை ஆழம் இல்லாமல் எடுக்கப் பட்டதால் எடுபடவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in