Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

மீண்டும் வந்தார் காயத்ரி ப்ரியா

31 மார், 2019 - 13:26 IST
எழுத்தின் அளவு:
gayathri-priya-came-back-to-acting-in-serials

சினிமா நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு மீண்டும் நடிக்க வந்தால் அம்மா நடிகையாகத்தான் வருவார்கள். அது சீரியல் நடிகைகளுக்கும் பொருந்துகிறது. ஒரு காலத்தில் சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் காயத்ரி ப்ரியா. எந்த சீரியலை பார்த்தாலும் காயத்ரி இருந்தது ஒரு காலம். கிட்டத்தட்ட 50 சீரியல்களுக்கு மேல் நடித்தார்.

அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு கணவருடன் மலேசியாவில் செட்டிலானார். அங்கு கணவர், குழந்தைகளுடன் வாழ்ந்தவர் தற்போது மீண்டும் தாயகம் திரும்பி விட்டார். குழந்தைகள் வளர்ந்து விட்டதாலும், மீண்டும் நடிக்க கணவர் சம்மதித்து விட்டதாலும் சென்னை வந்தவருக்கு மலையாள சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது. அதில் நடித்து வந்தார். இனி தமிழ் சீரியல்களில் இளம் வயது கேரக்டர் கிடைப்பது சிரமம் என்பதை புரிந்து கொண்டவர் அம்மா கேரக்டருக்கு இறங்கி வந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மணைகிளி தொடரில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கிறார்.


"நடிப்பு என்று வந்து விட்ட பிறகு கேரக்டர்களை பார்க்ககூடாது. அம்மா கேரக்டரில் விரும்பி நடிக்கிறேன். இத்தனை வருடங்களுக்கு பிறகும் ரசிகர்கள் என்னை நினைவு வைத்திருப்பதே பெரிய விஷயம். குடும்பத்தை பெரியவர்கள் பார்த்துக் கொண்டு எனக்கு நடிக்க முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள்" என்கிறார் காயத்ரி ப்ரியா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தறி, மலர் : 2 புதிய தொடர்கள்தறி, மலர் : 2 புதிய தொடர்கள் சின்னத்திரை தயாரிப்பாளர் ஆன லலிதாகுமாரி சின்னத்திரை தயாரிப்பாளர் ஆன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in