Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிரஜின், சாண்ட்ரா தம்பதிகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள்

27 மார், 2019 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Twin-baby-to-Prajin---Sandra

இது ஒரு காதல் கதை தொடரின் மூலம் அறிமுகமானவர் பிரஜின். அதன்பிறகு பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை தொடர்களில் நடித்தார். சினிமாவுக்கு சென்று தீக்குளிக்கும் பச்சை மரம், பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது சின்னத் தம்பி தொடரில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் சினிமாவிலும், தமிழில் சின்னத்திரையிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானவர் சாண்ட்ரா எமி. ரோஜா கூட்டம், மகன், தங்கம், தலையணைப் பூக்கள் உள்பட பல தொடர்களில் நடித்தார். சிவப்பு எனக்கு பிடிக்கும் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அக்கா அண்ணி வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரஜின், சாண்ட்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 14ந் தேதி காதலர் தினத்தன்று பிரஜின் தனது இன்ஸ்ட்ராகிராமில், "இந்தக் காதலர் தினம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், நான் அப்பாவாகவும், என் மனைவி அம்மாவாகவும் ஆகப்போகிறோம். எங்களுடைய பயணம் தொடங்கி 11 ஆண்டுங்கள் ஆகின்றன. தோழியாக, மனைவியாக, விமர்சகராக, தாயாக என் மனைவி இருந்திருக்கிறார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அந்த வரம் எனக்கு அதிகமாகவே இருக்கு" எனப் பதிவிட்டிருந்தார். கூடவே கர்ப்பிணி மனைவியுடன் எடுத்த படங்களையும் வெளியிட்டிருந்தார்.

தற்போது பிரஜின், சாண்ட்ரா தம்பதிகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. தாயும், சேய்களும் நலமாக உள்ளனர். தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
யப் டிவியில் - இந்தியன் டி-20 லீக்யப் டிவியில் - இந்தியன் டி-20 லீக் தறி, மலர் : 2 புதிய தொடர்கள் தறி, மலர் : 2 புதிய தொடர்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv - Bangalore,இந்தியா
10 மே, 2019 - 14:32 Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆஹா பெஸ்ட் wishes
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in