Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரையில் ராதிகாவின் சாதனை

10 மார், 2019 - 12:02 IST
எழுத்தின் அளவு:
radhika-new-record-in-teleserials

பெரிய திரையில் 300 படங்களுக்கு மேல் நடித்த ராதிகா சின்னத் திரையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். தனது ராடன் மீடியா சார்பில் சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீனை என பல தொடர்களை தயாரித்துள்ளார். அதில் பலவற்றில் அவரே நடித்துள்ளார். தற்போது சந்திரகுமாரி என்ற பிரமாண்ட தொடரை தயாரித்து அதில் நடித்தும் வருகிறார்.

இதுவரை 10க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள ராதிகா மொத்தம் 6 ஆயிரத்து 850 எபிசோட்களில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இதுவரை 3 ஆயிரத்து 430 மணி நேரம் நடித்துள்ளார். இது ஒரு சாதனை அளவாகும். இதுபற்றி கின்னஸ் சாதனைக்கும் தெரியப்படுத்த உள்ளனர். இதுகுறித்து ராதிகா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:


இதுவரை நான் 6,850 எப்பிசோடுகளில் நடித்துள்ளேன். தொலைக்காட்சியில் மட்டும் அது 3,430 மணிநேரங்கள். இப்படி நடித்துள்ள ஒரே நடிகை என்பதில் பெருமைகொள்கிறேன். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மிகவும் அவசியமான ஒரு பிரேக் எடுக்கிறேன். அதன் பிறகு ஜூன் மாதத்தில் இருந்து ஒரு புதிய பரிமாணத்தில் என்னை மீண்டும் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்குக் காண்பீர்கள். உங்கள் அனைவரின் பேரன்புக்கு நன்றி. என்று எழுதியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிங்கிங்ஸ்டார் : ஏழை குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சிசிங்கிங்ஸ்டார் : ஏழை ... கவர்ச்சி படங்களை வெளியிட்ட ரம்யா கவர்ச்சி படங்களை வெளியிட்ட ரம்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

11 மார், 2019 - 12:07 Report Abuse
ஸாயிப்ரியா பூவரசம்பூவின் புதிய பரிமாணங்கள் வெள்ளித் திரையையும் சின்னத் திரையையும் நடிப்பால், உழைப்பால் சாதித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் சாதனை தொடர வாழ்த்துக்கள் சினேகிதி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in