Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸின் சமரசம் பயன்தரவில்லை: தாடி பாலாஜி மீது மனைவி மீண்டும் புகார்

21 பிப், 2019 - 13:42 IST
எழுத்தின் அளவு:
again-nitya-filed-police-complaint-against-her-husband-balaji

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வந்தவர் தாடி பாலாஜி. சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் டி.வி பிக்பாஸ் இரண்டாம் சீசனில் கணவன், மனைவியை கலந்து கொள்ள வைத்து, அதில் இருவரையும் மோதவைத்து, இணையவைத்து நிகழ்ச்சியை பரபரப்பாக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய கமல்ஹாசன் இருவருக்கு அவ்வப்போது அறிவுரை கூறி, சமசரம் செய்து வைத்து சேர்ந்து வாழும்படி கூறினார். இருவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைத்த நிகழ்ச்சி என்று பிக்பாசுக்கு நல்ல இமேஜும் கிடைத்தது.


ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தாடி பாலாஜி தன்னை அடித்து துன்புறுத்துவதாக நேற்று மாதவரம் போலீசில் நித்யா புகார் அளித்தார். போலீசாரும் மனுவை ஏற்றுக் கொண்டு தாடி பாலாஜி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். புகார் அளிக்க வந்த நித்யா இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:


பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது கமல் உட்பட பலரும், நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியதன் பேரில் இருவரும் சமரசம் செய்து கொண்டோம். பழைய சம்பவங்களை மறந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். இதெல்லாம் சில காலம்தான். இப்போது மீண்டும் குடித்துவிட்டு அடிப்பது, என்னையும் என் மகளையும் துன்புறுத்துவது, ரவுடிகள் மற்றும் அவரின் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.


தற்போது புதிய பெண்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அதில் தலைவியாக உள்ளேன். இது அவருக்கு பிடிக்கவில்லை. உனக்கு என்ன தகுதி இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிடு என்று கூறி சண்டையிட்டு என்னை கொடுமைப்படுத்தினார். மேலும் என்னை பற்றி தவறாக அவரும் அவர் நண்பர்களும் வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அவமானப்படுத்துகின்றனர். இதனால் மனமுடைந்து மிகவும் கவலை அடைந்துள்ளேன். நான் மற்றும் எனது குழந்தையின் பாதுகாப்பு கருதி புகார் அளித்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பாரதி கண்ணம்மா : விஜய் டி.வியில் புதிய தொடர்பாரதி கண்ணம்மா : விஜய் டி.வியில் ... மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புகிறார் செல்வா மீண்டும் சின்னத்திரைக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Mano - Madurai,இந்தியா
24 பிப், 2019 - 03:50 Report Abuse
Mano தாய் மதத்திற்க்கு வந்துமா இவனுக்கு குணம் மாறவில்லை.
Rate this:
Sampathkumar Sampath - Karur,இந்தியா
23 பிப், 2019 - 12:43 Report Abuse
Sampathkumar Sampath வேஸ்ட் .
Rate this:
Jayvee - chennai,இந்தியா
23 பிப், 2019 - 11:56 Report Abuse
Jayvee பாலாஜி கிருத்துவராக மாறியபின் அமைதி காத்த நித்தியா மீண்டும் பாலாஜி இந்து மதத்திற்கு மாறியதால் தனது கிருத்துவ புத்தியை காட்டுகிறார்..
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
22 பிப், 2019 - 06:29 Report Abuse
 nicolethomson அவரு தாய் மதம் திரும்பிட்டதால உன்னோட வேலைய காட்டுறீயா நித்யா, தாம்பத்தியத்தில் தயவு செய்து மதத்தை திணிக்கதே, நீ பிறக்கும்போது இருந்த மதமும், இப்போ இருக்கும் மதமும் நாம் உடுத்தும் உடை போல, மாத்திக்கிட்டே இருக்கலாம், உறவு என்பது நீண்ட காலம் வருவது, மாற்ற முயற்சித்தால் தோல்விகளே நமது அடுத்த சந்ததியருக்கு , ஆதலால் மதம் என்று திமிரு பிடித்து திரியாம ஒண்ணா வாழும் வழிய பாருங்க,
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
22 பிப், 2019 - 02:39 Report Abuse
Shroog இவர்கள் இருவரும் இனி சேர்ந்து வாழவே முடியாது. சீக்கிரம் விவாகரத்து வாங்கி கொண்டு, அவரவர் வாழ்க்கையை பார்த்து கொள்ள வேண்ண்டும். ஒருவர் மற்றொருவரை குறை சொல்வதை விட்டு விட வேண்டும். தான் நல்லவன், தான் நல்லவள் என்று ரெண்டு பெரும் நிரூபிக்க தேவை இல்லை. இவர்களின் செய்தி பத்திரிகையில் வருவதை தவிர்க்கலாம். தாடி பாலாஜி, மகள் முன்னால் செய்த அருவெறுப்பான செயலை மறக்கவே முடியாது.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in