Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தெலுங்கு டிவி நடிகை நாக ஜான்சி தற்கொலை

06 பிப், 2019 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Telugu-TV-Actress-Naga-jhansi-commit-suicide

பிரபல தெலுங்கு டிவி நடிகையான நாக ஜான்சி (21), ஐதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பவித்ரா பந்தன் என்ற தெலுங்கு தொடரில் பிரபலமானவர் நாக ஜான்சி. ஏராளமான படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக போதிய வாய்ப்பு இல்லாததால் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.

ஐதராபாத்தில் வசித்த வந்த நாக ஜான்சி, இன்று காலை வெகுநேரமாகியும் தனது வீட்டின் அறை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் துர்கா பிரசாத், போலீஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாக ஜான்சி, இறப்பதற்கு முன்னர் இளைஞர் ஒருவர் உடன் போனில் பேசியதும், தகவல் பரிமாறி இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபரை நாக ஜான்சி காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இவர் ஜான்சியின் தூரத்து உறவினராம். காதல் தொடர்பான பிரச்னையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். நாக ஜான்சியின் செல்போனை கைப்பற்றி உள்ள போலீசார், அந்த இளைஞர் யார் என விசாரித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரைமிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சின்னத்திரை இயக்குனர்கள் உண்ணாவிரதம் சின்னத்திரை இயக்குனர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in