Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

போலீஸ் பாதுகாப்புடன் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்

26 ஜன, 2019 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Chinnathirai-Nadigar-Sangam-Election-begins

சினிமா நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பதை போன்று சின்னத்திரை நடிகர்கள் சங்கமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படும். பெரிய அளவில் போட்டி இருக்காது, பெரும்பாலான நிர்வாகிகள் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இணையாக கடும்போட்டி நிலவுகிறது. 4 அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறார்கள். ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கிக் கொள்கிறார்கள்.

இன்று இந்த தேர்தலுக்கான வாக்குபதிவு வளரசவாக்கம் மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. இது மாலை 5 மணி வரை நடக்கும். அதன் பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை நிரோஷா, நடிகர்கள் போஸ் வெங்கட், சிவன் ஸ்ரீநிவாசன், ரவிவர்மா, ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயலாளர் பதவிக்கு நிரோஷா அணியில், பரத்தும், சிவன் ஸ்ரீநிவாசன் அணியில் பரத் கல்யாணும், போஸ் வெங்கட் அணியில் பி.கே.கமலேஷூம் போட்டியிடுகிறார்கள், இவர்கள் தவிர துணைத்தலைவர் பதவிக்கு நடிகை சோனியாவும் போட்டியிடுகிறார்கள்.

14 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 56 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். லியாகத் அலிகான், தம்பிதுரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்துகிறார்கள். இந்த தேர்தலில் நிரோஷா அணிக்கும், போஸ் வெங்கட் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடன நிகழ்ச்சி நடுவர் ஆனார் ருக்மணிநடன நிகழ்ச்சி நடுவர் ஆனார் ருக்மணி ஆணாக நடிக்கும் ஆயிஷா ஆணாக நடிக்கும் ஆயிஷா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

வால்டர் - Chennai,இந்தியா
28 ஜன, 2019 - 15:44 Report Abuse
வால்டர் வாழ்த்துக்கள். வேறென்னத்தை சொல்ல
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
27 ஜன, 2019 - 03:18 Report Abuse
Bhaskaran ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி பணம் புழங்கும் தொழில் புதுமுகங்கள் அறிமுகம் வேறு எனவே இதில் போட்டி இருப்பதில் வியப்பென்ன அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் அனுமதி இல்லாது எடுக்கப்படும் தொடர்களுக்கு ஊடகங்கள் ஒளிபரப்ப மறுக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in