மீண்டும் தமிழில் பிரியங்கா திரிவேதி | சமந்தாவின் கேரியரில் சவாலாக அமைந்த முதல் படம் | அமலாபால் வேடத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன் | பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரஜினி படங்கள் டாப் | இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பூமிகா! | அடுத்த மாதம் தனுஷின் புதிய படம் ஆரம்பம் | ரூ. 400 கோடி மைல்கல்லை நெருங்கிய சிம்பா! | உண்மை சம்பவத்தில் விக்ரம் பிரபு | அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு | டூ லெட் சந்தோஷ் 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் |
ஐதராபாத்தில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ருக்மணி விஜயகுமார். பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு ஆனந்த தாண்டவம், கோச்சடையான் படத்தில் நடித்தார். ஷமிதாப் ஹிந்திப் படத்திலும் நடித்தார். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் தான் அவர் கடைசியாக நடித்தது.
அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான ருக்மணி, உலக முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். நடன பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார். பல நடன ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயா சூப்பர் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றுகிறார். அவருடன் நடன இயக்குனர் சின்னி பிரகாஷூம் நடுவராக இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி தென்மாநில அணிகளுக்கு இடையிலான நடனப்போட்டி நிகழ்ச்சியாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரள அணிகள் மோதுகிறது. நடன இயக்குனர்கள் ஜானி, அபி, பாப்பி, மகி ஆகியோர் அணிகளை வழி நடத்துகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டில் நடன நிகழ்ச்சி நடக்கிறது. ஞாயிற்றுக் கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.