ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி, சேனல்கள் போட்டி போட்டு புதிய படங்களை ஒளிபரப்ப இருக்கின்றன. விஜய் தொலைக்காட்சி ஏற்கெனவே செக்கச் சிவந்த வானம், பரியேறும் பெருமாள், வடசென்னை, சாமி 2 ஆகிய 4 படங்களை ஒளிபரப்ப இருப்பதாக அறிவித்திருக்கிறது. தற்போது பொங்கலுக்கு முதல் நாள் அதாவது வருகிற 14ந் தேதி மாலை 4 மணிக்கு நடிகையர் திலகம் படத்தை ஒளிபரப்ப இருப்பதாக ஜீ தமிழ் சேனல் அறிவித்திருக்கிறது.
இந்தப் படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் வெளியானது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும், என்.டி.ராமராவாக ஜூனியர் என்டிஆரும், ரங்காராவாக மோகன் பாபுவும் நடித்திருக்கிறார்கள். நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். கடந்த மே மாதம் வெளியான படம் தற்போது டிவியில் ஒளிபரப்பாகிறது.