Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நடனத்திலும் கலக்கும் ராமர்

05 ஜன, 2019 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Ramar-well-in-Dance

மதுரை மேலூர் அரிட்டாபட்டியைச் சேர்ந்தவர் ராமர், அடிப்படையில் மிமிக்ரி கலைஞரான இவர், மதுரை நகைச்சுவை மன்றத்தில் நிகழ்ச்சி நடத்தி வந்தார். அதன் மூலம் அவருக்கு ரோபோ சங்கர் அறிமுகம் கிடைத்தது. விஜய் டி.வியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு வந்தார். பெரும்பாலும் பெண் கேரக்டரில் நடித்து வந்தார். லட்சுமி ராமகிருஷ்ணனாக ஒரு காமெடி நாடகத்தில் நடித்து "என்னம்மா இப்படி பண்றீங்களேமா..." என்று அவர் டயலாக்கை இவர் கலாய்க்க, இது வைரலாக பரவி ஓவர் நைட்டில் ராமர் பிரபலம் ஆனார்.

இப்போதும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமர் தான் ஸ்டார் அட்ராக்ஷன். காமெடிக்காக அவ்வப்போது சின்னதாக நடனம் ஆடியவர் போகப்போக நடனத்தில் நல்ல பயிற்சி பெற்ற, இப்போது தேர்ச்சி பெற்ற நடன கலைஞர் ஆகிவிட்டார். ஆரம்பத்தில் ராமரின் நடனத்தை கிண்டல் செய்தவர்கள் இப்போது வாயடைத்து நிற்கிறார்கள்.


டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு ராமர் தேர்வானார். அவருடன் ஆடியது யார் தெரியுமா பிரபல கிளாசிக்கல் டான்சரும், பல நடன நிகழ்ச்சிகளில் டைட்டில் வென்றவருமான ரமா. இப்போது ராமர், ரமா ஜோடி இறுதிச் சுற்றுக்கு வந்திருப்பது தான் அடுத்த ஹெலைட்.


இத்தனைக்கும் ராமர் பெரியதாக ஒத்திகை பார்ப்பதில்லையாம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் பயிற்சியாளரிடம் ஸ்டெப் எப்படி என்று கேட்டு அதன்படியே அங்கேயே ஆடிக்காட்டிவிட்டு போய்விடுவாராம். சில சினிமாவில் நடித்திருந்தாலும் ராமருக்கு இன்னும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சினிமாவிலும் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ரெடி ஸ்டெடி போமீண்டும் ரெடி ஸ்டெடி போ ஹிந்தி பிக்பாஸ் தேர்வில் சர்ச்சை : ஸ்ரீசாந்த் ரசிகர்கள் ஆவேசம் ஹிந்தி பிக்பாஸ் தேர்வில் சர்ச்சை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

rs -  ( Posted via: Dinamalar Android App )
05 ஜன, 2019 - 15:21 Report Abuse
rs sirappu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in