பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தென்னிந்திய நடிகர் சங்கத்தை போன்று சின்னத்திரை நடிகர்களுக்கும் தனி சங்கம் உள்ளது. இதில் சுமார் 1200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பெரிய திரையில் நடிக்கும் சில முன்னணி நடிகர்கள் கூட இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். அந்தவகையில் 2019-2021ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற ஜனவரி 26ந் தேதி நடக்கிறது.
இந்தமுறை போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது செயலாளராக இருக்கும் போஸ் வெங்கட் தலைமையில் ஒரு அணியினரும், தற்போது டப்பிங் யூனியன் தலைவராக இருக்கும் ராதாரவி தலைமையில் ஒரு அணியினரும், ரவிவர்மா தலைமையில் ஒரு அணியினரும், போட்டியிடலாம் என்று தெரிகிறது. இதில் ரவிவர்மா அணி தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதில் ஆடுகளம் நரேன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.