இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி, முடிவுற்றிருந்த நிலையில் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் நிகழ்ச்சி இன்று(நவ., 24) முதல் ஒளிபரப்பாகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான கலைஞர்கள் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடந்தது. இதில் 12 ஜோடிகள் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர சிறப்பு பிரிவுக்கு மாற்றுத் திறனாளி கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியை தீபக் தினகர் தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை சினேகா, சுதா சந்திரன் மற்றும் லைலா பணியாற்றுகிறார்கள். நடிகை லைலா இந்த நிகழ்ச்சி மூலம் சின்த்திரைக்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.