சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் காலா. இதில் அவருடன் ஹீமா குரோஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், சமுத்திரகனி உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார், ஜி.முரளி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மும்பை தாதா கரிகாலன் தாராவி பகுதி மக்களுக்காக போராடுகிற கதை. தனுஷின் வொண்டர்ஃபார் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. லைகா புரொடக்ஷன் வெளியிட்டிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வந்த படம் மக்களின் சுமாரன வரவேற்பை பெற்றது. கடந்த ஜுன் மாதம் வெளிவந்த இந்தப் படம். 4 மாதத்திற்குள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. இன்று மாலை 3 மணிக்கு விஜய் டி.வி தீபாவளி சிறப்பு திரைப்படங்களின் வரிசையில் முதல் திரைப்படமாக ஒளிபரப்பாகிறது. ரஜினியின் படங்களில் குறுகியகாலத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் முதல் படம் காலா என்பது குறிப்பிடத்தக்கது.