Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் சீசன் 2 : வெற்றி பெற்றார் ரித்விகா

30 செப், 2018 - 23:54 IST
எழுத்தின் அளவு:
Biggboss-2-Tamil-:-Rithvika-won-the-title

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார்.

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசன், கடந்த ஜூன் 17ம் தேதி துவங்கியது.

ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, யாஷிகா, மும்தாஜ், பாலாஜி, சென்ட்ராயன், பொன்னம்பலம், மகத், டேனியல், ஷாரிக், அனந்த் வைத்தியநாதன், வைஷ்ணவி, ரம்யா, மமதி, நித்யா உள்ளிட்ட 16 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும் ஒருவர் வௌியேற்றப்பட்ட நிலையில், 67வது நாளில் விஜயலெட்சுமி 17-வது போட்டியாளராக வைலட் கார்ட்டில் இணைந்தார்.

முதல் சீசனை விட இந்த இரண்டாம் சீசனில் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் அதிகமாக இருந்தது. முதல் சீசன் 100 நாட்களை கடந்தது. இரண்டாவது சீசன் 105 நாட்களை கடந்தது.

இறுதிப்போட்டிக்கு ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி தேர்வாகினர். நேயர்களின் வாக்கு அடிப்படையில் ரித்விகா 30 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று பிக்பாஸ் டைட்டில் வென்றார்.

கமல், ரித்விகாவின் பெயரை அறிவித்ததும் கதறி அழுதார் ரித்விகா. அவரது பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு தனது வெற்றியை அர்ப்பணித்தார். அவருக்கு 50 லட்சம் பரிசுத் தொகையும், கோப்பையையும் பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியின் இறுதிநாளில் முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ், ஓவியா ஆகியோரும் கலந்து கொண்டனர். யாஷிகாவின் நடனம் உள்ளிட்ட கலைஞர்களின் கலர்புல் நடனமும், விஜய் டிவியின் காமெடி கலைஞர்களை வைத்து பிக்பாஸ் காமெடி நிகழ்ச்சியும் ரசிகர்களை மகிழ வைத்தது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
பாக்யராஜ் இடத்துக்கு வந்த ராஜேஷ்பாக்யராஜ் இடத்துக்கு வந்த ராஜேஷ் சினிமா பிரபலங்கள் மேற்பார்வையில் திருமணம் சினிமா பிரபலங்கள் மேற்பார்வையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

02 அக், 2018 - 06:33 Report Abuse
suraGopalan இவ மூஞ்ச பார்த்தாலே அப்படியே எரிச்சலா வருது
Rate this:
Nisha Rathi - madurai,இந்தியா
01 அக், 2018 - 18:45 Report Abuse
Nisha Rathi ரொம்ப முக்கியம் இந்தியா பொருளாதாரத்தை மாற்றி அமைக்க போகுது அணிய செலவாணி ரொம்ப கூடப்போகுது
Rate this:
01 அக், 2018 - 15:59 Report Abuse
katavaraya adhanale ippo petrol rate kuranchidum
Rate this:
yogi Rajendran. - tirupur  ( Posted via: Dinamalar Windows App )
01 அக், 2018 - 12:56 Report Abuse
yogi Rajendran. அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தலாம் யோகி
Rate this:
Mal - Madurai,இந்தியா
01 அக், 2018 - 09:11 Report Abuse
Mal Why should dinamalar give importance to a stupid show which s time of viewers. (Even my brother watches this stupid show) I can only pity on the youth who are misguided by these things, which is not going to help them in building themselves or the nation. They can instead listen to modi ji n look up to him as a roll model to work with dedication.
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in