விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
சின்னத்திரை உலகின் இளம் நட்சத்திரம் சங்கீதா. மதுரைக்கார பொண்ணு. பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு திடீரென மீடியா ஆசை வர, முன்னணி மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஆனார். அதன்பிறகு சீரியல் நடிகை ஆனார். அழகு தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த தொடரில் ரேவதியின் மூத்த மருமகள் பூர்ணாவாக வில்லித்தனம் காட்டி வருகிறார். சங்கீதாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவரது நடிப்பை ரேவதியும் தொடர்ந்து பாராட்டி வருகிறார். இப்போது அடுத்த பாய்ச்சலாக சினிமாவுக்கும் வந்து விட்டார். த்ரிஷா சோலோ ஹீரோயினாக நடிக்கும் பரமபத விளையாட்டு படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடிக்கிறார். தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் இருக்கிறார்.