Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் வீட்டில் செண்ட்ராயன் மனைவிக்கு வளைகாப்பு

02 செப், 2018 - 14:06 IST
எழுத்தின் அளவு:
sendrayan-wife-valaikappu-in-big-boss-house

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, இப்போது காமெடி நடிகனாகியிருப்பவர் செண்ட்றாயன். விஜய் டி.வியின் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். அவரைத்தேடி ஒரு நல்ல செய்தி வந்தது.

செண்ட்ராயனும், அவர் மனைவி கயல்விழியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களை அவரது நெருங்கிய உறவினர்கள் சந்திக்கலாம் என்ற விதிமுறையின் கீழ் கடந்த சில தினங்களுக்கு முன்பு செண்ட்றாயனை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று சந்தித்தார் கயல்விழி. கணவனை அதிக நாட்கள் பிரிந்திராத கயல்வழி நீண்ட பிரிவிற்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தார். அப்போது அந்த நல்ல செய்தியையும் சொன்னார்,


கயல்விழி இப்போது 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். திருமணமாகி இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத இந்த தம்பதிகளுக்கு இது பெரிய வரப்பிரசாதம். கணவர் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர். கணவனை கண்ட மகிழ்ச்சியில் சொல்லிவிட்டார்.


"நான் அப்பாவாகிட்டேன்" என்று கத்தி செண்ட்றாயனும் மகிழ்ச்சியானார். மனைவியை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல நிகழ்ச்சியை பார்த்தவர்களும் நெகிழ்ந்து போனார்கள். பிக்பாஸ் வீட்டில் கயல்விழிக்கு வளைகாப்பையும் நடத்தி விட்டார்கள்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
ஓவியா ஸ்டைலில் பிக்பாசில் கலக்கும் பூஜாஓவியா ஸ்டைலில் பிக்பாசில் கலக்கும் ... சின்னத்திரை நடிகை ஆன வித்யா சின்னத்திரை நடிகை ஆன வித்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

சிற்பி - Ahmadabad,இந்தியா
09 செப், 2018 - 14:16 Report Abuse
சிற்பி இதெல்லாம் ஒரு செட்டப். நாலு மாசம் ஆச்சாம் சொல்லலையாம். முப்பத்தைந்து நாட்களிலேயே கர்பமாய் இருப்பது தெரிந்து விடும். ஆனால் நாலு மாசமாக சொல்லவில்லை. பிக் பாசில் கண்டுபிடித்து சொன்னார்களாம். நல்ல விளம்பரம். பாத்து கல்யாணம் மட்டும் காட்டுங்க. மலஹாசன் சினிமா நினைவுல முதல் இரவையும், உதடோடு உதடு முத்தம் என்று எல்லாம் காட்டுங்கள் என்று கூற போகிறார்.
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06 செப், 2018 - 09:48 Report Abuse
Pugazh V @நாடோடி - எதுக்கு கலாச்சாரம் லெவலுக்கு பீல் ஆகறீங்க. குட்டி குட்டியா டிரெஸ் போட்டுக்கிட்டு நாலு பிகருங்க சுத்தி சுத்தி வருது பாத்து என்ஜாய் பண்ணிட்டு போவீங்களா..கலாச்சாரம், டீசன்ஸி என்றெல்லாம் எழுதிக்கிட்டு. அப்படிப் பார்த்தால், கோட் சூட், டை நம்ம கலாச்சாரமா, இன்டெர்வியூவிற்கு போட ஆரம்பித்து ஆபீசில் போர்டு மீட்டிங், ப்ரொடக்ஷன் மீட்டிங்க வரை போட்டாகணுமில்ல. கலாச்சாரம் னு சொன்னா ஆபீசில் சீட்டை கிழிச்சிடுவாங்க. எப்படி வசதி?
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
04 செப், 2018 - 21:09 Report Abuse
Bhaskaran சந்தோஷமாக இருக்கட்டுமே ஐயா
Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03 செப், 2018 - 16:57 Report Abuse
நாஞ்சில் நாடோடி கலாச்சாரத்தை முற்றிலும் சிதைக்கும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ்.இது BIG BASS அல்ல, PIG PASS...
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
03 செப், 2018 - 15:26 Report Abuse
Sridhar நாலு மாசமா சொல்லலேன்னா அவருக்கு சந்தேகம் வராதோ? ஷோ trp ய ஏத்தணும்கறதுக்காக என்னென்னல்லாமோ செஞ்சுதான் பார்க்குறாங்க
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in