சிம்பு - த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்? | பிங்க் ரீமேக் படப்பிடிப்பில் அஜித் இன்று முதல் பங்கேற்பு | விக்ரம் பிரபுவை கைதூக்கி விடுவாரா அசுரகுரு? | கென்னடி கிளப்பில் கபடி பயிற்சியாளராக சசிகுமார் | எனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு யுஏ சான்று | நடிகர் கடத்தலா? திடீர் பரபரப்பு | லட்சுமியின் என்டிஆர் - சந்திரபாபு நாயுடு வில்லன் ? | 90 எம்எல் - ஒரே ஒரு டிரைலர், ஓகோ வியாபாரம் | தன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா | இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன் |
சினிமாவின் அடுத்தக்கட்டம் வெப்சீரிஸ் என்று சொல்லும் அளவிற்கு அதன் வளர்ச்சி உயர்ந்து வருகிறது. கோலிவுட் துவங்கி பாலிவுட் வரை ஏகப்பட்ட வெப்சீரிஸ்கள் உருவாகி வருகின்றன. அதற்கு தனி வரவேற்பும் கிடைத்து வருகின்றன.
அந்தவகையில் ஜிகர்தண்டா, மெர்குரி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தனது ஸ்டோன் பென்ஞ்ச் பட நிறுவனம் மூலம் நிறைய குறும்படங்களை தயாரித்து வருகிறார். இப்போது கள்ளச்சிரிப்பு என்ற புதிய வெப்சீரியஸையும் தயாரித்துள்ளார். அம்ருதா சீனிவாசன் என்பவர் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். ரோகித் நந்தகுமார் இயக்கி உள்ளார்.
24 வயது பெண், தன் விருப்பத்துக்கு மாறாக, பெற்றோரின் கட்டாயத்தில் திருமணம் செய்து கொள்கிறாள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இன்றி செல்ல, ஒருக்கட்டத்தில் கணவனை கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அதன்பின் நடக்கும் விஷயங்களை சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் கதையாக உருவாக்கி உள்ளார் இயக்குநர் ரோகித்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் உண்டு. எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், போட்டோவிற்கு போஸ் கொடுக்க வேண்டும் என்றால், கேமராவுக்கு முன் அதையெல்லாம் மறைத்து, சிரிப்பை வெளிப்படுத்த வேண்டும். அந்த சிரிப்பு உண்மையானது அல்ல? அது தான் கள்ளச்சிரிப்பு. இந்த கள்ளச்சிரிப்பு தான் இந்த தொடரின் கருத்து.
கள்ளச்சிரிப்பு டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது தொடருக்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொடரை ஜீ5 இணையதளத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
Facebook:
https://www.facebook.com/ZEE5/
Twitter:
https://twitter.com/zee5india
Twitter Tamil (For Kallachirippu):
https://twitter.com/ZEE5Tamil