பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் சுனிதா கோகோய். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றார். சுனிதா இப்போது சினிமா ஹீரோயின் ஆகிவிட்டார். விவன் என்ற புதுமுகம் இயக்கித், தயாரித்து, நடிக்கும் யார் அந்த கருப்பு ஆடு படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இது அடல்ட் காமெடி படம். இணையத் தளத்தில் பிரபலமான கரடி ராஜா என்ற கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஜூலியை போட்டது யாரு, டிங்கு டாங்கு டிங்கு அவுந்து போச்சு ரிங்கு என்ற பாடல்கள் படத்தில் இடம்பெறுகிறது. அதற்கு சுனிதா கவர்ச்சியாட்டம் போட்டிருக்கிறார்.
"அடல்ட் காமெடி படம் என்றால் ஆபாச படம் என்று அர்த்தம் இல்லை. இளைஞர்கள் அன்றாட வாழ்கில் சிரித்து பேசும் இயல்பான வசனங்களே படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் கண்டெண்ட்தான் அடல்ட் விஷயமே தவிர காட்சிகளில் ஆபாசம் இருக்காது. என்னுடைய திரைப்பட முயற்சியில் இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும். என்கிறார் சுனிதா.