ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜீ தமிழ் சேனலில் பிரபலமான நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை, உலகறிய செய்து பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சியாக இது இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்புகள் இருந்தன. இருப்பினும் 1500 எபிசோடுகளை கடந்து இந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக கூறி இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.