ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கலர்ஸ் ஹிந்தி டி.வியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் ஷனி. சனி பகவான் வாழ்க்கையையும், மகிமையையும் சித்திரிக்கும் தொடர். ரோகித் கருணா, கார்த்திகேய மால்வியா, தினா தத்தா, ஜூஹி பர்மார் உள்பட பலர் நடிக்கிறார்கள். கமல் மோன்கா, சுமித் தாக்கூர், குர்பித் ராணா, அவிர்ஜி என நான்கு இயக்குனர்கள் இயக்குகிறார்கள். 340 எபிசோட்களை கொண்டது இந்த தொடர்.
தற்போது இந்த தொடரை கலர்ஸ் தமிழ் சேனல், தமிழில் டப் செய்து சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்ற பெயரில் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. வருகிற ஜூன் 6ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் திருநள்ளாரில் சனீஸ்வர பகவானுக்கு தனி கோவில் உள்ளது. பலர் சனீஸ்வர பகவான் பக்தர்களாக இருக்கிறார்கள். அதனால் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஒரு திரைப்படத்திற்கு நிகரான தொழில்நுட்பத்தில் உருவாகி ஒளிபரப்பாகும் தொடர் இது.