'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கடந்த ஒன்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த 'விஜய் அவார்ட்ஸ்' என்ற விருது விழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. தமிழ்த்திரைப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவி வாங்காமல் இருந்ததால், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம்.
அதன்பிறகு தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்க முன் வந்தது விஜய் டிவி. ஆனாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறாமலே இருந்தது.
இந்நிலையில், 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 10-வது வருடமாக இந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விருது விழா நடைபெற இருக்கிறது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், அனுராக் காஷ்யப், யூகி சேது மற்றும் நடிகை ராதா ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த வருடத்துக்கான விஜய் அவார்ட்ஸ் விருது பெறும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
வருகிற சனிக்கிழமை, அதாவது மே 26 அன்று மிகப் பிரம்மாண்டமாக விழா நடைபெற இருக்கிறது.
அஞ்சலி, சயீஷா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகளின் நடனங்கள் இந்த விழாவில் இடம் பெறுகின்றன.