ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே குண்டான பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். அப்படி கிடைத்தால் அது காமெடி கேரக்டருக்காகத்தான் இருக்கும். நடிகை ஊர்வசியின் அக்கா கல்பனா குண்டாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். அதை அப்படியே தனது பாசிட்டிவாக மாற்றி 200 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சரிதாவும் குண்டு பெண்ணாக சினிமாவுக்கு வந்து சாதித்தவர். தற்போது ஆர்த்தி தனது குண்டான தோற்றத்தை காமெடிக்கு பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இப்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரில் நடிக்க வந்திருக்கிறார் அஸ்வினி. பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினி 90 கிலோ எடை கொண்டவர்.
25 வயதாகும் அஸ்வினி, பெங்களூரில் ஐடி கம்பெனியில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவரது கணவர் மிதுனும் அதே துறையில் பணியாற்றி வருகிறார். சில வருடங்களுக்கு முன்புதான் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கன்னட சேனல் ஒன்று நடத்திய ரியாலிட்டி ஷோவில் குடும்பத்துடன் கலந்த கொண்டார் அஸ்வினி. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலுக்கு குண்டு பெண்ணை தேடிக் கொண்டிருந்தவர்கள். அந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு சென்னைக்கு அழைத்து வந்து சீரியல் ஹீரோயினாக்கி விட்டார்கள். குண்டாக பிறந்த பெண் தன்னை நோக்கி வரும் அவமானங்களை தாங்கிக் கொண்டு எப்படி சாதிக்கிறார் என்பதுதான் சீரியலின் கதை.