ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றிருக்கிறது செழியன் இயக்கிய டூ லெட் படம். இந்த படத்தின் நாயகி யார் தெரியுமா? ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் அழகிய தமிழ் மகள் தொடரின் நாயகியாக நடித்து வருபவர். படத்தில் மேக்அப் போடாமல் எளிமையான நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடித்திருந்தார்.
பல சர்வதேச படவிழாக்களில் டூ லெட் திரையிடப்பட்டபோது ஷீலாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. டூ லெட் படம் விரைவில் தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.
ஷீலாவுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது. அழகிய தமிழ் மகள் தொடர் பாதிக்காத வகையில் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஷீலா. குறிப்பாக பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறார்.