தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி மற்றும் நடிகை நிஷா. கனா காணும் காலங்கள் தொடங்கி தெய்வமகள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள் வரை பயணித்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி, நான் சிவப்பு மனிதன், வில் அம்பு உள்பட பல படங்களிலும் நடித்தார்.
சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா தற்போது கேன்சர் நோயாளிகளுக்கு விக் தயாரிக்க உதவும் வகையில் தனது நீண்ட தலைமுடியின் ஒரு பகுதியை தானம் செய்துள்ளார்.
கேன்சர் நோயாளிகளுக்கு ஹீமோ தெரபி சிகிச்சை அளிக்கும்போது முடிகள் உதிர்ந்து விடும். இதனால் அவர்களுக்கு விக் தயாரிக்க முடிதானம் வலியுறுத்தி செலிபிரிட்டிகள் இதுபோன்று செய்வதுண்டு. சமீபத்தில் ஓவியா தனது கூந்தலில் ஒரு பகுதியை தானம் செய்தார். தற்போது நிஷா செய்துள்ளார்.
"கேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடியை கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளேன் .எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக் ஆக மாறுவதில் மகிழ்ச்சி" என சமூகவலைதளத்தில் குறிபிட்டிருக்கிறார் நிஷா.