பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புதுடில்லி : பிரபல இணையதள டிவியான யப், பல்வேறு விதமான பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பி வருகிறது. அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளையும் நேரலையில் வழங்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்த முத்தரப்பு டுவென்டி-20 கிரிக்கெட் போட்டிகளையும் நேரலையில் வழங்கியது.
இந்நிலையில், அடுத்தப்படியாக இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல்., கிரிக்கெட் சீசன் 11 போட்டிகளையும் நேரலையில் வழங்க இருக்கிறது. விவோ ஐபிஎல் - 2018 போட்டிக்கான, அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பார்ட்னர் உரிமம் யப் டிவிக்கு கிடைத்திருக்கிறது. இதற்கான டிஜிட்டல் ரைட்ஸ் ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகி உள்ளது.
தென்-கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பா, தென் அமெரிக்கா நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐபிஎல் - 2018 போட்டிகளை யப் டிவியில் காண முடியும்.
இந்த சீசனில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களமிறங்க இருப்பது ஹைலைட்ஸ்.