திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை | நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் | நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படத்தில் தமன்னா | மறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசி | பருத்திவீரன், சாஹோ, சண்டக்கோழி-2 : ஞாயிறு திரைப்படங்கள் |
சின்னத்திரை சீரியல்களில் அடிக்கடி பார்க்கும் முகம் ரவிசந்திரனுடையது. வெள்ளைத்தாமரை தொடரில் நடிக்க தொடங்கியர், தற்போது சரவணன் மீனாட்சி வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். மசாலா வியாபாரியாக இருந்தவர் இப்போது வளர்ந்து வரும் குணசித்திர நடிகராக மாறி வருகிறார். மதுபானக்கடை என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்ததால் சினிமா வட்டாரத்தில் அவருக்கு மதுபானக்கடை ரவி என்று பெயர். மசாலா வியாபாரியாக இருந்து நடிகரானது பற்றி ரவி கூறியதாவது:
தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மசாலா கம்பெனி உரிமையாளருடன் இணைந்து காமதேனு மசாலா கம்பெனியை நடத்தினேன். இடையில் அவர் பிரிந்து சென்று விடவே, நானும் கம்பெனியை மூடி விட்டு, நடிப்பு ஆர்வத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து விட்டேன்.
கோமல் சுவாமிநாதன் குழுவில் நாடத்தில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறேன். சங்கீத பைத்தியங்கள், இருட்டில் தேடாதீர்கள் போன்ற நாடகங்கள் முக்கியமானது. இன்னமும் கூட தண்ணீர் தண்ணீர் நாடகம் போடப்பட்டு வருகிறது. அதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தியேட்டர் லேப், ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் போன்ற கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதே போல நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தேன்.
இந்த அனுபவத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடத்தொடங்கினேன். அப்போது ராதிகா, வெள்ளைத்தாமரை டிவி சீரியல் எடுத்துக்கொண்டிருந்தார். நண்பர்கள் மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது. முதலில் என்னைப்பார்த்தவர் ஒரு மானிட்டர் எடுத்து விடலாம் என்று கூறினார். பனிரெண்டு பக்க வசனத்தை நான் எளிதாக பேசுவதைப்பார்த்து விட்டு வேண்டாம், நேரே ஷாட்டுக்கு போகலாம் என்று கூறினார். நாடக நடிகர்கள் மீது அப்படியொரு நம்பிக்கை அவருக்கு. தொடர்ந்து ருத்ரம், சரவணன் மீனாட்சி தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன்.
மதுபானக்கடை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படம் எனக்கு அடையளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து பாஸ் என்ற பாஸ்கரன், காதல் சொல்ல வந்தேன், ஹரிதாஸ், சண்டியர், இசை, சண்டமாருதம், சண்டிவீரன், கட்டப்பாவக்காணோம், அரிமாநம்பி, கபாலி, படங்களில் நடித்தேன்.
தற்போது சண்டைகோழி 2, வண்டி படங்களில் நடித்து வருகிறேன். இதில் வண்டி படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. கவனிக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. இதில் வில்லன் பாத்திரம் கூட விதிவிலக்கல்ல. சினிமாவில் நெகடிவ் கதாபாத்திரங்கள் தான் ரசிகர்கள் மனதில் முதல் பதிவாகிறது. அதனால் வில்லன் கதாபாத்திரம் நடிப்பதில் லாபம் தான் என்றார் ரவி.