என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
அகண்டா திரைப்படத்துடன் துவங்கிய கோடை கொண்டாட்டத்தில் 7 ஞாயிறும் 7 புதிய திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ள ஜீ தமிழ், இந்த வாரயிறுதியை அடுத்த கட்ட பொழுதுபோக்கு கொண்டாட்டமாக மாற்றவுள்ளது. வரும் சூப்பர் சண்டேவில் தமது ரசிகர்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
ரஜினி தொடரின் சிறப்பு எபிசோடுடன் துவங்கவுள்ள இந்த கொண்டாட்டம், அதனைத் தொடர்ந்து உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக 'என்ன சொல்ல போகிறாய்' காதல் திரைப்படமும், சூப்பர் குயின் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவுள்ளது.
பரபரப்பான காட்சிகளும், சுவாரஸ்யங்களும் நிறைந்த ரஜினி தொடரின் சிறப்பு எபிசோட், ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது. அதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணிக்கு அஷ்வின் குமார், தேஜூ அஸ்வினி, புகழ் நடிப்பில் வெளியான காதல் படமான 'என்ன சொல்ல போகிறாய்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
மாலை நேரம், பொழுதுபோக்கு கொண்டாட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ளது. ஆயிஷா, ஸ்ரீது கிருஷ்ணன், தேஜஸ்வினி, பார்வதி, மற்றும் கண்மணி மனோகரன் ஆகியோர் சூப்பர் குயின் பட்டத்தினை வெல்ல போட்டியிடவுள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த பிரம்மாண்ட கிராண்ட் பினாலேவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மற்றும் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். நடிகர் அஷ்வின் குமார் செலிபிரிட்டி நடுவராக பங்கேற்கவுள்ளார்.
அடுத்தடுத்த பொழுபோக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த சூப்பர் சண்டேவை உங்கள் ஜீ தமிழில் மதியம் 2 மணி முதல் இரவு 9:30 மணி வரை காணத்தவறாதீர்கள்.