திருமதி.ஹிட்லர் சீரியலின் ஹீரோயின் என்ன செய்கிறார் தெரியுமா? | ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி-2 முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சித்து மற்றும் ஆல்யா மானசா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை முன்னிட்டு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பிரசவ காலம் நெருங்கிவிட்ட நிலையில், குறைந்தது ஒருமாத காலமாவது ஆல்யா ஓய்வுக்கு சென்றுவிடுவார். இதனால் அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா? எனஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'சீரியலை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை' என கூறியுள்ளார். இதனால், ராஜா ராணி-2ல் அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பார் என தெரிய வருகிறது. ஆல்யா தற்போது 7 மாதம் கர்ப்பத்துடன் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பரீனா கரப்பமாக இருந்த காலத்தில் அவர் ஜெயிலுக்கு சென்றதாக காட்டி பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், ராஜா ராணி-2வை பொறுத்தவரை ஆல்யா தான் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அவர் சீரியலை விட்டு விலகும் பட்சத்தில் சீரியலை தொடர்ந்து ஒளிபரப்புவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.