‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிந்துவடைந்துள்ள நிலையில், பிக்பாஸ் ஓடிடி வெர்ஷன் விரைவில் வெளியாகவுள்ளது. ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயருடன் வெளியாகும் அந்த நிகழ்ச்சி, 45 நாட்கள், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள முந்தைய சீசன்களின் போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் முதலில் ஓவியா ஓகே சொன்னதாகவும், அதன்பின் உடல்நிலை சரியில்லை என தட்டிக்கழித்து வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அதேபோல் சிநேகன், திருமணமானதை காரணம் காட்டி போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சிநேகன் கலந்துகொள்ளவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஜனவரி 24ஆம் தேதி வெளியாகியுள்ள பிக்பாஸ் அல்டிமேட் புரோமோவில் புகழ் மற்றும் தீனா நடித்துள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் முதல் போட்டியாளர் குறித்த க்ளூ கிடைத்துவிட்டதாக சொல்லும் தீனா ஒரு யானையின் படத்தை காண்பிக்கிறார், புகழின் கையில் சோளப்பொரி உள்ளது. இரண்டையும் லிங்க் செய்து காட்டுப்பயலே பாடலை எழுதிய கவிஞரை பற்றி பேசும் இருவரும் சிநேகனை மறைமுகமாக குறிப்பிடுகின்றனர். இதன்மூலம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளர் சிநேகன் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அடுத்த போட்டியாளர்கள் யார் என்கிற க்ளூ அடுத்த புரோமோக்களாக வெளியாகவுள்ளது.