Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் 5 : பூதாகரமாக வெடிக்கும் பாவனி - அமீர் முத்த சர்ச்சை!

20 டிச, 2021 - 14:06 IST
எழுத்தின் அளவு:
Pavni---Amir-kiss-makes-contraversy-in-biggboss

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளரான அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்த நிகழ்வு தற்போது பரபரப்பாக சமூகவலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் என்றாலே கிசுகிசு தான். ஆனால், இந்த முறை சீசன் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையிலும் பெரிதாக எந்த கிசுகிசுவும் பேசப்படவில்லை. முந்தைய எபிசோடுகளை ஒப்பிடும் போது இந்த எபிசோடு பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை. ஆனால், பிக்பாஸ் 5 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்போது தான் விஷயம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒருபக்கம் பிரியங்கா, நிரூப், ராஜூ, அக் ஷரா என சண்டைக்கோழிகள் சுற்றிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் அமீர் - பாவனி -அபிநய் என காதல் ரீல் ஓடியது.

போன வார எபிசோடில் தான் அபிநய் - பாவனி காதல் விவகார சர்ச்சை முடித்து வைக்கப்பட்டது. இந்தவாரம் அபிநய் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிறே்றப்பட்டார். இதற்கிடையில் தற்போது அமீரும் பாவனியை காதலிப்பதாக சொல்லவே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்திய எபிசோடில் படுக்கையில் படுத்துக்கொண்டிருந்த பாவனியை அமீர் நெருங்கி சென்று ரகசியம் பேசுவது போல் திடீரென முத்தமிட்டார். இதனால் ஒரு கணம் பாவனி அதிர்ச்சியடைந்தாலும் அமீரின் அந்த செயல் தனக்கு பிடிக்கவில்லை என்று கருத்து தெரிவித்ததோடு விட்டுவிட்டார்.

இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாவனி ரசிகர்கள் ஆர்ம, அமிரீன் இந்த செயலுக்கு ஓப்பனாக கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அமீரை உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர்.

ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்பெஷல் எபிசோடில் பேசும் பிக்பாஸ் அமீரின் இந்த முத்த சர்ச்சையை குறித்து எதுவும் பேசவில்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கே பஞ்சாயத்து பேசும் பிக்பாஸ், இந்நிகழ்வை அசால்ட்டாக கடந்து சென்றது எப்படி என ரசிகர்கள் கமல்ஹாசனை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கனா காணும் காலங்கள் புது சீசன் தொடக்கம்கனா காணும் காலங்கள் புது சீசன் ... ராஜபார்வை சீரியலுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு ராஜபார்வை சீரியலுக்கு எண்ட் கார்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

வால்டர் - Chennai,இந்தியா
23 டிச, 2021 - 16:31 Report Abuse
வால்டர் என்னோட டூவீலர்க்கு பஞ்சர் போட போனேன். இந்த டியூப்ல இனிமே பஞ்சர் போட முடியாது. புது டியூப்தான் போடணும்னு சொல்லிட்டான்.
Rate this:
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
21 டிச, 2021 - 15:30 Report Abuse
Natchimuthu Chithiraisamy போட்டோ போடுங்க. எல்லாரும் பிக் பாஸ் பார்ப்பதில்லை
Rate this:
நக்கீரன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21 டிச, 2021 - 11:27 Report Abuse
நக்கீரன் எங்க தலைவருக்கு எப்போதுமே முத்தம் என்றால் ரொம்ப புடிக்கும். அதனால பேசாம கூட போலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in