Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25 கோடி வசூலைக் கடந்த 'டாக்டர்'

12 அக், 2021 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Doctor-movie-crosses-Rs-25-crore-mark

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் 'டாக்டர்'.


கொரானோ இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்களுக்கு மக்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கும்படியான படங்கள் வெளிவரவில்லை. ஆனால், 'டாக்டர்' படத்திற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வருவதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ந்துள்ளனர்.


பொதுவாக விடுமுறை நாட்களில்தான் படங்களின் வசூல் நன்றாக இருக்கும். வார முதல் நாட்களில் பெரிய வசூல் இருக்காது. அதை 'டாக்டர்' படத்தின் வசூல் நேற்று மாற்றியிருக்கிறது. நேற்று திங்கள் கிழமை காலை காட்சிக்குக் கூட நல்ல கூட்டம் வந்ததாகச் சொல்கிறார்கள்.


கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படத்தின் வசூல் 25 கோடியைக் கடந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மற்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் தெம்பைக் கொடுத்துள்ளது.


இத்தனைக்கும் 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன் சிரிக்கவே வைக்கவில்லை என்ற விமர்சனம் இருந்தாலும் படத்திற்கு சினிமா பிரபலங்கள் கொடுத்த ஆதரவும், அவர்கள் செய்த பிரமோஷனும்தான் இந்த வசூலுக்குக் காரணம் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
என்னது ஸ்ரேயாவுக்கு குழந்தை இருக்கா....! - ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்என்னது ஸ்ரேயாவுக்கு குழந்தை ... மீண்டும் விஜய்யுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்? மீண்டும் விஜய்யுடன் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Kash - chennai,இந்தியா
16 அக், 2021 - 13:07 Report Abuse
Kash ஆடின்ஸ் பல்ஸ் பார்த்து விமர்சனம் எஸுத்தடங்க .. உங்க விமர்சனம் எல்லாம் ஒன் சைடு தான் இருக்கு
Rate this:
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
14 அக், 2021 - 06:42 Report Abuse
thonipuramVijay எல்லாம் பொய், இந்த சாம்பார்கேயன் மார்க்கெட் அவுட் ...இனி மீள்வது முடியாதது ...பல முறை அரைச்ச மாவையே மறுபடியும் அரைச்சிருக்கிறார்கள் ...யாரும் படத்திற்கு போய் காசை காரியாக்க வேண்டாம்.
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
13 அக், 2021 - 15:19 Report Abuse
திரு.திருராம் வடிவேலு போல வெற்றி வெற்றி என கத்திவிட்டு பிறகு தயாரிப்பாளர் வந்து மீடியால கதறுவாரு பாருங்க அப்ப தெரியும் வசூல் லட்சணம்,,,,சூப்பர் ஸ்டார் சுப்ரீம் ஸ்டார் முதல் உலக ஸ்டார் உள்ளூர் சுள்ளான் ஸ்டார் வரை அனைவரும் இப்படித்தான்,,,,,,,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in