'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் | மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு | பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் | 'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் |
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலுவும், ஜோதிகா நடித்த வேடத்தில் அனுஷ்காவும் நடிப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் சந்திரமுகி-2வில் அனுஷ்கா நடிக்கிறாரா? என்று பி.வாசுவிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமின்றி இன்னும் சில நடிகைகளிடமும் பேசி வருகிறோம். அதனால் அனுஷ்கா தான் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகை நடிக்கிறாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆக, சந்திரமுகி-2 படத்தில் அனுஷ்கா நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.