Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அடுத்து கைது வாரன்ட் தான் - கங்கனாவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை

15 செப், 2021 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Next-arrest-warrent-:-Court-warns-Kangana

மும்பை : அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என, ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நடிகை கங்கனா மீது, டிவி பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாக கூறியதாக, திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கணா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் கங்கனா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனாவின் வழக்கறிஞர் திரைப்பட விளம்பரத்திற்காக கங்கனா சென்ற போது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு கங்கனா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என, நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியைத் தொடர்ந்து காட்டுக்குள் செல்லும் அஜய் தேவ்கன்ரஜினியைத் தொடர்ந்து காட்டுக்குள் ... ஆதி பட டீசரை பாராட்டிய அமிதாப் ஆதி பட டீசரை பாராட்டிய அமிதாப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Manian - Chennai,ஈரான்
16 செப், 2021 - 01:05 Report Abuse
Manian அழகான, புத்திசாலியான இந்த நடிகையை வழி நடத்த ஒரு நல்ல கணவவன் தேவை கோபத்தைக் குறைத்தால் இவர் பிரகாசிப்பார். காலம் மிக குறைவே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in