Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூடு பிடிக்கும் தமிழ் சினிமா

15 செப், 2021 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-slightly-pickup

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நான்கு மாதங்கள் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த வாரம் தான் இரண்டு முக்கிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. ஆனால் இரண்டு படங்களுக்கும் பெரிய வரவேற்பு இல்லை என்பது உண்மை.

இதனால் தியேட்டர் வட்டாரங்கள் கொஞ்சம் கலக்கத்துடன் தான் உள்ளன. இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் இரண்டு புதிய படங்களாவது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் செப்டம்பர் 17ம் தேதி 'கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

அதற்கடுத்த வாரங்களிலும் சில பல புதிய படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். அதற்குப் பிறகு அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு மேலும் சில புதிய படங்களும் வெளியாக உள்ளன.

விஷால், ஆர்யா நடித்துள்ள 'எனிமி', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அதற்கடுத்து நவம்பர் மாதம் தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த', சிம்பு நடித்துள்ள 'மாநாடு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அஜித் நடித்துள்ள 'வலிமை' பட வெளியீட்டுத் தேதியையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தப் படங்கள் மட்டுமல்லாது அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் வாரத்திற்கு இரண்டு படங்ளாவது வெளியாக வாய்ப்புகள் உள்ளது. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையிலும் சில பெரிய படங்கள் வெளியாகலாம்.

அடுத்தடுத்து புதிய படங்கள் வெளிவர உள்ளதால் அவற்றின் டீசர், டிரைலர், சிங்கிள் வெளியீடு என அப்டேட்களாக வர உள்ளன. இதன் காரணமாக தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கட்-அவுட்டிற்கு ரத்த அபிஷேகம் - ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்கட்-அவுட்டிற்கு ரத்த அபிஷேகம் - ரஜினி ... கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஸ்ரேயா கணவருடன் திருப்பதி ஏழுமலையானை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

15 செப், 2021 - 18:56 Report Abuse
ilaiyaraja muthu சூடு பிடிச்சு அப்படியே பொசுங்கிடுச்சுன்னா ரொம்ப நல்லா இருக்கும்...... காசு இல்லப்பா.......
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
15 செப், 2021 - 15:24 Report Abuse
KayD இனி எவன் நடிச்சு இருந்தாலும் தியேட்டர் ku வரும் கூட்டம் பெருசா irukadhu...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in