Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு 10 கோடி தருவதாக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்

14 செப், 2021 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Prakashraj-announced-if-win-he-will-give-Rs.10-crore-to-Telugu-actors-association

தெலுங்குத் திரையுலகில் நடிகர் சங்கத்திற்கென 'மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற சங்கம் உள்ளது. அந்த சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணிக்கும், மஞ்சு விஷ்ணு தலைமையிலான அணிக்கும்தான் கடுமையான போட்டி உள்ளது. கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் எப்படி தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள சங்கத்திற்குப் போட்டியிடலாம் என்ற சர்ச்சை எழுந்தது. அதன்பின் அது அப்படியே அடங்கிப் போனது.

இந்நிலையில் தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு நடிகர் சங்கர் உறுப்பினர்கள் பலருடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார் பிரகாஷ்ராஜ். அப்போது அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால் சங்கத்திற்காக 10 கோடி ரூபாயை நன்கொடை தருவதாக அறிவித்துள்ளாராம். அவ்வளவு பெரிய தொகையை பிரகாஷ்ராஜ் அறிவித்தது குறித்துதான் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னணி ஹீரோக்கள் பலரும் பிரகாஷ்ராஜுக்கு அவர்களது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'தலைவி' மூலம் எங்களுக்கு நல்ல வருமானம் தான் : தயாரிப்பாளர் தகவல்'தலைவி' மூலம் எங்களுக்கு நல்ல ... வடிவேலு படத்துக்கு புதிய பெயர்கள் பரிசீலனை வடிவேலு படத்துக்கு புதிய பெயர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Kumar - Madurai,இந்தியா
20 செப், 2021 - 18:23 Report Abuse
Kumar தமிழ் சினிமாவைப் போல ,தெலுங்கு சினிமாவும் பாவாடைகளின் கைகளுக்கு விரைவில் போய்விடும். பணமே இல்லைனு சொன்னவரிடம் பத்து கோடி எப்படி வரும்? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
14 செப், 2021 - 14:43 Report Abuse
கோவிந்தா அடப்பாவி கொரோனாவுக்கு கூட அவ்வளவு காசு குடுக்கலியே நீ....... சங்கத்துக்கு குடுக்கிறியா..... சன் டிவி காரனுக்கு தெலுங்கு சினிமாவை தாரை வார்த்து குடுக்கப் போற அதானே.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in