Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவிடம் தெய்வீகத்தை உணர்ந்தேன் : கன்னட புல்லாங்குழல் கலைஞர் நெகிழ்ச்சி

08 செப், 2021 - 15:49 IST
எழுத்தின் அளவு:
Flute-artist-shares-her-working-experience-with-Ilayaraja

கர்நாடகத்தை சேர்ந்த பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் அஷ்வினி கவுசிக். இவர் கடந்த சில நாட்களாக இளையராஜாவுடன் ஒரு படத்தின் பின்னணி இசைக்காக இணைந்து பணிபுரிந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசைஞானியின் புதிய ஸ்டுடியோவில், ராஜா சாருடன் 3 நாட்கள் பணியாற்றினேன். அனைத்தும் அற்புதமான புதிய அனுபவமாக இருந்தது. இப்படி ஒரு அனுபவம் இதுவரை என் வாழ்நாளில் கிடைத்ததேயில்லை. ராஜா சாருடன் பணிபுரிந்த ஒவ்வொரு இசைக்கலைஞரும் ஏன் அவரைப் பற்றி இவ்வளவு பயபக்தியுடன் பேசுகிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிகிறது.

ஒரு நொடி கூட யோசிக்காமல் உடனடியாக புதிய இசைக் குறியீடுகளை அவர் இயற்றிக் கொடுக்கும் மாய வித்தையை நான் நேரில் பார்த்தேன். அவர் எழுதித்தந்த ஸ்வரங்களை வாசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது. என் கனவு நனவாகியது, அவர் செவிகளில் இருந்து எதுவும் தப்பிவிடமுடியாது. ஒவ்வொரு இசைக்கருவியின் நுட்பமான இயல்பும், நுணுக்கங்களும், அவற்றை வாசிக்கும் இசைக்கலைஞரின் வாசிப்பும் அவருக்குத் தெரியும்.
தான் எழுதும் ஒவ்வொரு ஸ்வரத்தையும் எப்படி வாசிக்க வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்று இசைக்கலைஞருக்கு அவர் கற்பிக்கிறார். அப்படி ஒரு நேர்த்தியான இசையுலகில் நாம் முற்றிலும் விழுந்து தொலைந்து போய், அந்நாளின் இறுதியில், நாம் வாசித்த முழு வடிவத்தின் அமைப்பைக் கேட்கும்போது, அவ்வுணர்வு நம்மை ஓர் இன்ப மயக்கத்தில் வீழ்த்திச் செல்கிறது.

நான் வாசித்த இசைக்குறிப்புகள், மற்றவர்கள் வாசித்த அதன் பதிலிணைப்பு பகுதிகள், காட்சிக்குத் தேவையான உணர்வுகள் அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் அவர் கம்போஸ் செய்து முடித்தவை என்று எண்ணும்போது சிலிர்க்கிறது. கிட்டத்தட்ட 40 மணி நேரம் நாங்கள் ரெக்கார்டிங்கில் இருந்தோம், அப்படி வேலை செய்த அந்த 40 மணி நேரத்திலும், அவரிடம் கண்ட மற்றொரு வியப்பிற்குரிய விஷயம். நாங்கள் வேலை செய்த இசைக்கு சம்பந்தமில்லாத விஷயத்தையும் ஏதாவது ஒரு நிமிடத்தில் கூட அவர் பேசி நாங்கள் கேட்கவில்லை.

அவருடைய இசைக்கூடத்தில் இருந்த மிகவும் திறமையும் அனுபவமும் வாய்ந்த இசைக்கலைஞர்களுடன் இசைத்தது மற்றோர் ஆனந்தம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மூன்று நாட்களும் ராஜா சார் என்னுடன் கன்னடத்தில் பேசியதைக் கேட்கும் அனுபவம் கிட்டியது பேரானந்தம். இன்று ஒரு வார்த்தைக்கு மிகவும் சரியான மற்றும் பொருத்தமான பயன்பாட்டைக் கண்டேன், அதுதான் தெய்வீகம்.

இவ்வாறு எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஜாங்கோ தமிழில் முதல் டைம் லூப் திரைப்படம்: இயக்குனர் தகவல்ஜாங்கோ தமிழில் முதல் டைம் லூப் ... விக்ரம் படப்பிடிப்பில் இணைந்த வி.ஜே மகேஸ்வரி விக்ரம் படப்பிடிப்பில் இணைந்த வி.ஜே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
11 செப், 2021 - 19:45 Report Abuse
N Annamalai உண்மை .
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09 செப், 2021 - 03:47 Report Abuse
meenakshisundaram 'இசைக்கு மொழியே இல்லை .மொழி தடையும் இல்லை 'எல்லா மொழிகளும் தென் போன்றவையே அவற்றை பேசுபவர்க்கு .எம்மொழியையும் ஒதுக்குவதோ இகழ்வதோ அறிவீனமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in