Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காம்ப்ரமைஸ்' செய்து கொண்டாரா ஷங்கர்?

08 செப், 2021 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Did-Shankar-compramise-him?

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை என பல நடிகர்களும், நடிகைகளும் பேட்டி கொடுத்ததை பல முறை பார்த்திருக்கிறோம்.

தமிழில் முன்னணியில் இருக்கும் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கில் ராம்சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இன்று இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்திற்கான முதல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த போஸ்டரில் படத்தின் நாயகன் ராம்சரண், நாயகி கியாரா அத்வானி, படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், மற்றொரு நாயகி அஞ்சலி, நடிகர்கள் ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் கோட், சூட் அணிந்து கொண்டு, பின்னணியில் ஆயிரக்கணக்கானோர் உடன் வர, கையில் பைல்களுடன் படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த போஸ்டரில் படத்தின் நாயகன் ராம்சரண் பெயர் தான் முதலில் இடம் பெற்றுள்ளது. அதற்குக் கீழேதான் இயக்குனர் ஷங்கர் பெயர் உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில்தான் ஷங்கர் இப்படி தனது பெயரை இரண்டாவது வர சம்மதித்துள்ளார். மற்ற படங்களில் அவருடைய பெயர்தான் முதலில் இருக்கும். மேலும், 'ஷங்கரின்....' என்றுதான் படப் பெயரையும் குறிப்பிடுவார்கள்.

தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி' படத்தின் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்த ராஜமவுலியின் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' பட விளம்பரங்களில் அவரது பெயருக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஷங்கர் அந்த முன்னுரிமையை இந்தப் புதிய படத்தில் விட்டுக் கொடுத்துவிட்டார் என்றே தெரிகிறது. மேலும், இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'ஆர்சி 15, எஸ்விசி 50' என்றே குறிப்பிடுகிறார்கள்.

ஷங்கரின் இந்த மாற்றம் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக உள்ளதென கோலிவுட்டில் ஆச்சரியப்படுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஹாட் மாடல் ஸ்வயம் சித்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்ஹாட் மாடல் ஸ்வயம் சித்தாவின் ... ஒரே சமயத்தில் 3 படங்களை ஊக்குவிக்கும் விஜய் சேதுபதி ஒரே சமயத்தில் 3 படங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11 செப், 2021 - 04:49 Report Abuse
NicoleThomson காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முயல்கிறார் ஷங்கர், ஏற்கனவே ஸ்வீட்பாக்ஸ் குடும்பம் வைகை புயலை வைத்து ஷங்கருக்கு குடைச்சலை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள் இனி ஜேப்பியார் பெண்ணின் கையும் ரஞ்சித்தின் கையும் ஓங்கும், அமீர் போன்றவர்களின் படமெடுக்கும் வெறி அதிகரிக்கும் என்றே கணிக்க முடிகிறது
Rate this:
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
09 செப், 2021 - 18:47 Report Abuse
தாமரை மலர்கிறது ஷங்கரின் எந்திரன் ரெண்டு ராஜமௌலியின் படத்தை விட நன்றாக ஓட வில்லை. சிறப்பாக படம் எடுக்கும்வரை, தெலுகு நடிகர்கள் ஆட்டம் போடுவார்கள். யாருக்கு மௌவுசு உள்ளதோ, அவருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மற்றவர்கள் தங்கள் ஈகோவை கொஞ்சம் இறக்கிக்கொண்டாகவேண்டும். இல்லையெனில் பருப்பு வேகாது.
Rate this:
Ramesh - Chennai,இந்தியா
08 செப், 2021 - 14:21 Report Abuse
Ramesh மானம்கெட்ட பொழப்பு, காசு எங்க குடுத்தாலும் தன் மனதை இழகனுமா ?? தமிழ் சினிமா எங்க போகுது நெ தெரில?? வர வர கோல்டிங்க domination அதிகமா ஆகிட்டே போகுது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in