Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நாங்க நிஜ காதலர்களா? ரசிகர்கள் சந்தேகத்தை போக்கிய சீரியல் ஜோடி

31 ஆக, 2021 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Saravanavickram---Deepika-clears-the-rumour

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜோடியாக நடித்து வரும் சரவண விக்ரம் - ஐஸ்வர்யா நிஜத்திலும் காதலர்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது அந்த கேள்விக்கு இருவரும் ஜோடியாக சேர்ந்தே விளக்கமளித்துள்ளனர்.

இப்போதெல்லாம் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் நிஜ வாழ்விலும் கல்யாணம் செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர் தொடரில் கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரமும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக 'நீங்கள் நிஜத்திலும் காதல் ஜோடியாக ஆகிவிட்டீர்களா'? என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சரவண விக்ரம், தீபிகா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் லைவ்வில் 'நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான். இந்த கேள்வியை தான் எல்லோரும் கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்லி சொல்லி எங்களுக்கே கஷ்டமாக இருக்கிறது'என கூறினர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நிறைவடைகிறது 'பூவே பூச்சூடவா' சீரியல்நிறைவடைகிறது 'பூவே பூச்சூடவா' ... 'எனக்கும் சில பொறுப்புகள் இருக்கிறது' - கதை சொல்ல வருகிறார் திவ்ய தர்ஷினி 'எனக்கும் சில பொறுப்புகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
01 செப், 2021 - 12:37 Report Abuse
Bala Murugan ஏண்டா மானங்கெட்ட ரசிகர்களே சீரியலில் ஜோடியாக நடித்து சமூக வலைத்தளத்திலும் போட்டோ, வீடியோ வெளியிட்டால் உடனே காதல் ஜோடிதானா? பிரஷாந்த் கதாபாத்திரத்தில் நடிப்பவனும் இவர்களோடு சேர்ந்து வீடியோ போடுறான். உடனே இருவரும் தீபிகாவை நிஜ வாழ்க்கையில் காதலிக்கிறார்கள் இருவரும் தீபிகாவை கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று சொல்வீர்களா ? நீங்களோ உங்கள் அக்காவோ தங்கையோ பக்கத்து வீட்டில் தகுந்த வயதுள்ளவரோடு ஆடி, பாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டால் உடனே முடிவு கட்டி விடுவீர்களா ? நல்ல குடும்பம்டா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in