Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைதாகிறாரா மீரா மிதுன்.. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு!

09 ஆக, 2021 - 13:53 IST
எழுத்தின் அளவு:
7-case-file-against-Meeramithun-may-be-arrest-at-any-time

சர்ச்சை பேச்சால் சிக்கியுள்ள நடிகை மீரா மிதுன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மாடல் அழகி போட்டிகளில் கலந்து கொண்டிருந்த மீரா மிதுன் சினிமா மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் நடிகையாக திரையில் தோன்றினார். எப்போதும் சர்ச்சையாக கருத்துகளை கூறி பொதுவெளியில் சிக்கிக்கொள்ளும் மீரா மிதுனை பலரும் தொடர்ந்து கண்டித்தும் வந்தனர். நெட்டிசன்களும் தங்களது பங்கிற்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ட்ரோல் செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது அவர் பேசிய பேச்சு இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் எஸ்சி எஸ்டி மக்களை குறித்து அவதூறான கருத்துகளை பேசியிருந்தார். சினிமாத்துறையே அவர்களால் தான் மோசமாக உள்ளது என்றும் கூறியிருந்தார். இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் மீரா மிதுனுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். புகாரை எடுத்துகொண்ட காவல்துறையினர் மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிய வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இனி, ஆந்தலாஜி என்றால் ரசிகர்கள் ஓடுவார்களா? இயக்குனர்கள் ஓடுவார்களா?இனி, ஆந்தலாஜி என்றால் ரசிகர்கள் ... போதை ஏத்தும் கண்ணால் ரசிகர்களை மிரள விட்ட லாஸ்லியா போதை ஏத்தும் கண்ணால் ரசிகர்களை மிரள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

elakkumanan - Naifaru,மாலத்தீவு
09 ஆக, 2021 - 15:11 Report Abuse
elakkumanan இந்த ஆட்சியால் விளைந்த ஒரே ஒரு நன்மை, இந்த நபரை கைது செய்ததாக மட்டுமே இருக்கமுடியும்.......இன்னும் கைது பண்ணலை....
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
09 ஆக, 2021 - 14:45 Report Abuse
தமிழன் 20 வருடம் உள்ளே வைத்து களி திங்க வைக்கனும்
Rate this:
09 ஆக, 2021 - 14:06 Report Abuse
சாம் தமிழ்நாட்டில் உண்மைய வெளிப்படையாக பேசவே கூடாது. பேசினால் இப்படி தான்... மாற்றாக ஊமை குசும்பு அரசியல் செய்து யாரும் வளராமல் பார்த்து கொள்ள வேண்டும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in